March 3, 2026
மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அரண்மனை தெரு பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க, தேனி கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தேனி கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் தினேஷ் குமார் தலைமையில், தேனி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார், பெரியகுளம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ், பெரியகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகுரு,பொதுக்குழு உறுப்பினர் தவமணி கருப்பசாமி ,தேனி நகர் கழக துணைச் செயலாளர் சுந்தரபாண்டியன் ஆகியோரது முன்னிலையில் நடைபெற்ற இவ் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பெரியகுளம் நகர் கழக செயலாளர் பழனியப்பன் வரவேற்புரையாற்றினார்.

கழக அமைப்பு செயலாளர் சுதா கே பரமசிவன், தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோ டை ராமர், தலைமை கழக பேச்சாளர் கிருபானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர், கழகத்தின் போர்வாள் அப்பாஸ் மைதீன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தவமணி, விவசாய அணி இணை செயலாளர் பெரிய வீரன், கழக அம்மா பேரவை துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட கழக இணைச் செயலாளர் முத்துலட்சுமி, மாவட்ட கழக பொருளாளர் வைகை பாண்டி,மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் தமிழரசன், பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணி, சரவணகுமார், ராஜேந்திரன், சுதாகர், அழகு பாண்டியன், வீராசாமி ,மகேந்திர பாபு ,சேகர், உதயகுமார், விஷ்ணு, கண்ணன், ராஜேஷ், முருகேசன் உட்பட கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், செயலாளர்கள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *