தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் சந்திப்பு அருகே தேனி வடக்கு மாவட்ட திமுக, பெரியகுளம் நகர கழகம் மற்றும் வடக்கு மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம் நகர்கழக செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தேனி வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஸ்டீபன் வரவேற்புரை ஆற்றினார். மாநில திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் மூக்கையா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார், மாவட்ட கழக அவை தலைவர் செல்ல பாண்டியன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் எல். எம். பாண்டியன். பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர், தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், தலைமை கழக பேச்சாளர்கள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, வாஞ்சிநாதன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் முத்துராமலிங்கம், போடி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் நேருபாண்டியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் நகர் கழக செயலாளர்கள் நாராயணன் பாண்டி (தேனி)புருஷோத்தமன் (போடி) ஒன்றிய கழக செயலாளர்கள் லட்சுமணன், ரத்தின சபாபதி, முருகேசன், சக்கரவர்த்தி, ஐயப்பன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர், துணை அமைப்பாளர் கார்த்திக், பெரியகுளம் நகர் கழக நிர்வாகிகள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் நிபந்தன், ராதாகிருஷ்ணன், தங்கபாண்டியன், சபிதா பானு,சுதந்திரம்,பேரூர் கழக செயலாளர்கள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட சார்பாக அமைப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர்,கழக பிரமுகர்கள்மற்றும் தொண்டர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.






