May 4, 2025
கந்தர்வக்கோட்டை அருகே தேசிய வாக்காளர் தின பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கந்தர்வக்கோட்டை அருகே தேசிய வாக்காளர் தின பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

கந்தர்வக்கோட்டை ஜன 24.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நம்பூரான் பட்டி கிளையின் சார்பில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் கிளைச் செயலாளர் பிரபா அனைவரையும் வரவேற்றார்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளர் ரஹ்மத்துல்லா தேசிய வாக்காளர் தினம் குறித்து பேசும் பொழுது ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய தேசம் விடுதலை அடைந்த பின், தேர்தல் நடத்தி மக்களின் வாக்குகளைப் பெற்று நாட்டில் குடிமக்களின் ஆட்சி அமைக்கப்பட்டது.

ஜனவரி 25, 1950 அன்று, தேர்தல்களை சீராக நியாயமான முறையில் நடத்துவதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட் டது. நாட்டின் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட தினத்தை 2011ஆம் ஆண்டு முதல் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இன்று 15வது தேசிய வாக்காளர் தினம்.


புதிய இளம் வாக்காளர்களை ஊக்குவிப்பது, வாக்காளர் சேர்க்கையை உயர்த்துவது மற்றும் மக்களாட்சியை மேம்படுத்துவது போன்ற முக்கிய நோக்கங்களோடு தேசிய வாக்காளர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


‌‌நாட்டின் வாக்காளர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த தினத்தில், குடிமக்கள் தேர்தல் குறித்த தகவலறிந்து, தவறாமல் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தப்பட்டு, தேர்தலில் 100% மக்களின் பங்களிப்பை ஊக்குவிக்கிறது.


நாட்டின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான இந்த தினம், தேசிய, மாநில, மாவட்ட, தொகுதி மற்றும் வாக்குச்சாவடி வாரியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


வாக்களிப்பதைப் போல் எதுவும் இல்லை, நான் நிச்சயம் வாக்களிக்கிறேன் என்ற கருப்பொருளோடு, இந்த ஆண்டின் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.
வாக்களிப்பது அனைவரின் பொறுப்பு என்பதை வலியுறுத்தி, வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை இக்கருப்பொருள் எடுத்துரைக்கிகிறது. நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையையும் தேசத்தின் ஜனநாயகத்தையும் இந்த தினம் ஊக்குவிப்பது குறிப்பிடத்தக்கது.


தேர்தல் வருவதற்கு முன்பே, வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை தவறாமல் சரிபார்க்க வேண்டும். தேர்தலன்று தவறாமல் தேவையான அடையாள ஆவணங்களை எடுத்து சென்று உரிய வாக்குச்சாவடியில் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.


மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 18 வயது நிரம்பிய அனைத்து தகுதியான குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களித்து நாட்டின் முன்னேற்றத்துக்கான ஆட்சியை தேர்வு செய்ய உரிமை உள்ளது என்று பேசினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிளைத்தலைவர் தேவி பிரியா செய்திருந்தார். நிறைவாக கிளை பொருளாளர் சரண்யா நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.