
கீழக்கரை பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் தொழில் திறன் மேம்பாடு பயிற்சி நிறைவு விழா.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில்.
தொழில்துறை தேவைகளுக்கான அறிவியல் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் பயிற்சி மமுகாமில் இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து ஆறு பாலிடெக்னிக் கல்லூரிகளின் இறுதியாண்டு பயிலும் மின்னியல் மின்னணுவியல் மற்றும் கணினி அறிவியல் பாட பிரிவுகளை சேர்ந்த 150 மாணவர்கள் பங்கேற்றார்கள்.
இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவரையும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் பாலசுப்ரமணியன் அவர்கள் வரவேற்று பேசினார். கல்லூரியின் முதல்வர் ஷேக் தாவூத் அவர்கள். தலைமை தாங்கி பேசுகையில், இப்பயிற்சியின் மூலம் சிறு தொழில் வாய்ப்புகள், புதிய தொழில் தொடங்குவது எப்படி, நேர்முக பயிற்சிக்கு தயார் செய்வது. சரளமாக ஆங்கிலத்தில் பேசுவது, தனிப்பட்ட திறன்களை வளர்ப்பது. ஐடி தொழில் போன்ற தலைப்புகளில் கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றதாக கூறினார். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, மாவட்டத்திலுள்ள மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மாணவர்கள் நேரில் அழைத்து செல்லப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் திரு. கணேஷ் குமார் அவர்கள் பயிற்சி முகாமின் அறிக்கையினை சமர்ப்பித்தார்கள். மேலும். கீழக்கரை. சையத் ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் .S. ராஜசேகர் அவர்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அனைவர்க்கும் வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக . இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்
மதுகுமார் அவர்கள் கலந்து கொண்டு பேசுகையில் மாணவர்கள் தங்களின் புதுமையான யோசனைகள் மூலம் அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடுப்புகளை உருவாக்கி நம் நாட்டு மக்களுக்கு உதவ வேண்டுமென கூறினார். இப்பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுகுமார் அவர்களும் ஷேக் தாவூத் அவர்களும் சான்றிதல் வழங்கினார்கள்.
நிறைவாக, மெரைன் துறைத்தலைவர் (பொறுப்பு) கண்ணன் அவர்கள் நன்றி கூறினார்.