April 19, 2025
மும்பை ஆரே காலனியில் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா.

மும்பை ஆரே காலனியில் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா.

ஆரே குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் ஆரே காலனி யூனிட் எண் 8-ல் முதலாம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா சமீபத்தில் தமிழ்நாட்டில் இருந்து ரோடு வேலை செய்வதற்காக தற்காலிகமாக மும்பைக்கு புலம்பெயர்ந்த தமிழ்நாடு தமிழர்களின் குடும்பங்களுக்கு பொங்கல் பானை பொங்கல் பொருட்களான கரும்பு தேங்காய் அரிசி பருப்பு வெள்ளம் மஞ்சள் நெய் பாதாம்பருப்பு பனைக்கிழங்கு மற்றும் பெண்களுக்கு புடவை சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கி பொங்கலிட்டு சிறப்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவுக்கு நேரில் வந்து கலந்துக்கொண்டு விழாவை ஒருங்கிணைந்து சிறப்பாக நடத்தி கொடுத்த, ஸ்ரீதர் தமிழன் ( மும்பை விழுத்தெழு இயக்கம்) சிம்பு (யூத் வித் எ மிஷன்) பீம் பாய் (வங்கி ஊழியர்) கோயில் முக்கியஸ்தர்கள் சகாதேவன், எம்.ஸ் வேலன். நாதஸ்வரம் தவில் வித்துவான் சரவணன், சங்கர் (எம், ஜி.ஆர் நற்பணி மன்றம்),
பவர் (ஆரே செகரட்டி அதிகாரி) , ஆரே காவல் துறை அதிகாரிகள், ராதாகிருஷ்ணன் (அரசியல் பிரமுகர்) ஆனந்த் (திரைத் துறை பணியாளர்), ஆர்.டி.ஓ குழுவினர்கள்
ஆறுமுகம், வெங்கடேஷ், கணேஷ், வீரா, வர்கீஸ், ஏழுமலை இருதயராஜ், செல்வரங்கம்,
டெரர் பாய்ஸ் நண்பர்கள் சூர்யா, ரமேஷ், வாசு, அஜித் போன்றவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் .

பொங்கல் விழாவிற்கான ஏற்பாட்டை ஆரே குடிசை வாழ் குழந்தைகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மும்பை தமிழன் ஆர்.கே.சிவபாரதி, சூர்ய ராஜ், ஹரேஷ்சேதுபதி, இலத்திகா,ரோகித்,மகிமைநாதன்கவி பாரதி,கெளதம்,திவாகர்,
மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் விழாவிற்கான ஏற்பாட்டை செய்தனர்.

ஆரே காலனியில் வசிக்கும் மும்பை வாழ் ஆரே காலனி தமிழர்கள் 1956 இல் இருந்து வசிக்கிறார்கள். ஆரே காலனி பால்பண்ணை மாட்டுக்கு புல் அறுக்கவும், தீவனைப்போடவும் தமிழ்நாட்டில் இருந்து அழைத்துவரப்பட்டு நான்கு தலைமுறை வாழ்க்கையை வாழ்ந்துவிட்டார்கள் .இவர்களுக்கு போதுமான குடிநீர் வசதியோ, எப்போது வீடுகளில் இருந்து விரட்டப்படுவோம் னு பயத்திலேயே வாழ்கிறார்கள் .

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மும்பையின் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரமாக முதுகுஎலும்பாக உள்ளனர், ஆனால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களாகவும், அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும், எந்த அடிப்படை வசதிகள் குறிப்பாக பாதுகாப்பான வசிப்பிடம், சுத்தமான தண்ணீர் ,கழிப்பிடம் வசதி ,பணி இன்சூரன்ஸ் , வேலை பாதுகாப்பு வசதியற்று வாழ்கின்றனர். நிரந்தரமான அடிப்படை ஊதியம் கிடைப்பதில்லை அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் போதிய ஊட்டச்சத்து சுகாதார வசதிகள் கிடைப்பதில்லை , மேலும் பல ஆண்டுகளாக கல்வியில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளனர் .

தமிழ்நாட்டில் நல்லது கெட்டதுக்கு வட்டிக்கு கடன் வாங்கி அடைக்கமுடியாத சூழலிலும் போதுமான கல்வி நிரந்தரமான வேலைவாய்ப்பு தொழில் தொடங்க பொருளாதாரம் கடன் பெற நிலம் மற்ற சொத்துக்கள் இல்லாததால் மும்பைக்கு ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வந்து பணிபுரிந்து ஜூன் மாதம் இறுதியில் தமிழ்நாட்டுக்கு திரும்புகின்றனர் புலம்பெயர்ந்த மக்களின் வாழ்வை மேம்ப்படுத்த வேலையில் அமர்த்தும் நிறுவனங்கள், ஏஜென்ட்கள், தமிழ்நாடு மற்றும் மராட்டிய அரசு பிரச்சனைகளை கவனத்தில் எடுத்து தீர்வு காண்பதுடன் அடிப்படைவசதிகள் செய்துதருவதே உண்மையான சமத்துவ பொங்கலாகும் .

தகவல் :- ஸ்ரீதர் தமிழன் , மும்பை விழித்தெழு இயக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.