
பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
திருநெல்வேலி மாவட்டம் கொண்டா நகரம் விரிவாக்க பகுதி குடியிருப்போர் நலச்சங்கம் சார்பாக கொண்டா நகரத்தில் திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இரவில் பாதயாத்திரை செல்லும் போது ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் திரு. சோணமுத்து பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி ஆகியோர் கலந்துகொண்டு ஸ்டிக்கர்களை ஒட்டினர்
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் மாரியப்பன் செயலாளர். டேனியல் ஆசீர் பொருளாளர் செல்வ பெருமாள் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கராஜ் லட்சுமணன் வைத்தியநாதன் ராஜய்யா ஊடக ஒருங்கிணைப்பாளர் டேவிட் ஆகியோர் செய்திருந்தனர்