March 2, 2026
நற்பணி சாதனையாளர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு நேரில் வாழ்த்து

நற்பணி சாதனையாளர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு நேரில் வாழ்த்து

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக இருப்பவர் முனைவர் பெருமாள். இவர் அப்பள்ளியினுடைய வளர்ச்சிக்காக மாணவர்களின் கலை மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளில் சிறப்பாக மாணவர்களை செயல்பட வைத்ததற்காக அவருக்கு நெல்லை லைப் சார்பாக இந்த ஆண்டிற்கான சிறந்த நற்பணி சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அவருக்கு இன்று காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி , சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் திரு.டேனியல் ஆசீர் ஆகியோர் நேரடியாக சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்*

அப்போது பள்ளியின் முதுகலை தமிழாசிரியர் முல்லைவேந்தன் பட்டதாரி ஆசிரியை திருமதி வள்ளியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *