
பத்திரிக்கையாளர் குடும்பத்தின் மீது கொலை செய்ய திட்டம் தீட்டி தாக்குதல் நடத்த முயன்ற வழக்கறிஞர்.

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் தினசரி நாளிதழில் தலைமை நிருபராக பணிபுரிந்து வரும் பத்திரிக்கையாளர் பாலசிந்தன். அவர் வசித்து வரும் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தது சம்பந்தமாக செய்தி வெளியிட்டதற்காக வழக்கறிஞர் வினோத் குமார் என்பவர் நள்ளிரவில் நிருபரின் வீடு புகுந்து பத்திரிக்கையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் மீது தாக்கியதற்காக நிருபரின் மனைவி தமிழக மகளிர் ஆணையத்திற்கு மனு அனுப்பியதன் காரணமாக மகளிர் ஆணையம் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் மீது நடவடிக்கைக்காக மாவட்ட கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்த நிலையில் இதை அறிந்த வழக்கறிஞர் நேற்று இரவு நிருபரின் குடும்பத்தின் மீது கொலை செய்ய திட்டமிட்டு 18 வயது பூர்த்தியடையாத சிறுவர்களை வைத்து தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளார். எதிர்பாராத விதமாக அவர் பத்திரிக்கையாளர் வீட்டிற்குள் சென்றதால் திட்டம் நடைபெறாத நிலையில் அவரை வீட்டை விட்டு வெளியே வர வைப்பதற்காக இரவு 11.50 மணியளவில் வீட்டு வாசலுக்கு அரை நிர்வாணத்துடன் சென்று குழந்தைகள், முன்பே அவரையும் அவர் மனைவியையும் தகாத, ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி சாலைக்கு வரவழைத்து கொலை செய்ய முயற்சித்துள்ளார் வழக்கறிஞர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குற்ற சம்பவங்களை கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.






