
உளுந்தூர்பேட்டை நகரக் கழகத்தின் சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகரக் கழகத்தின் சார்பில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடைய பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் திமுக நகர செயலாளர் டேனியல்ராஜ் தலைமையில் உளுந்தூர்பேட்டை தொகுதி பொறுப்பாளர் மகாதேவி ஜெயபால், ஜெயங்கொண்டம் தொகுதி பொறுப்பாளர் கலா சுந்தரமூர்த்தி, உளுந்தூர்பேட்டை நகர மன்றத்தின் தலைவர் திருநாவுக்கரசு, பொதுக்குழு உறுப்பினர் செல்லையா ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி 3000 பேருக்கு இட்லி பொங்கல் வடை உள்ளிட்ட காலை உணவு தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி மதியழகன், குமரவேல், மாலதி ராமலிங்கம், செல்வகுமாரி ரமேஷ்பாபு, இளைஞரணி நிர்வாகிகள் முருகவேல், மனோபாலன், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் குருராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நீதிபதி, மற்றும் நிர்வாகிகள் ஆனந்த், ரவி, தினேஷ், சிவக்குமார், மற்றும் அனைத்து சார்பு அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.