March 2, 2026
புதிதாக நாளை திறக்கப்பட்டுள்ள மது கடையை எதிர்த்து புதுநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சாலை மறியல்

புதிதாக நாளை திறக்கப்பட்டுள்ள மது கடையை எதிர்த்து புதுநல்லூரில் ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சாலை மறியல்


குன்றத்தூர் டிசம்பர் 9:-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுநல்லூர் கிராமத்தில் நாளை திறக்கப்பட உள்ள அரசு மதுபான கடையை எதிர்த்து ஊராட்சி மன்ற தலைவர் ஞான பிரகாஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

சாலை மறியல் நடத்த போவதை முன்கூட்டியே அறிந்த காவல்துறையினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுநல்லூர் பகுதியில் குவிக்கப்பட்டனர் பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் பொதுமக்களை சமாதானப்படுத்தி காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் ஞான பிரகாஷ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேரில் மனு கொடுப்பதாக சென்றுள்ளார்.

அரசு மதுபான கடை திறப்பு குறித்து பொது மக்களிடம் கேட்டபோது எங்கள் பகுதியில் அரசு பள்ளி உள்ளதாகவும் மற்றும் அவ்வழியே இரவு நேரங்களில் ஊர் பொதுமக்கள் வேலைகளுக்கு சென்று வருவதாகவும் இம் மதுபான கடை திறக்கப்பட்டால் புது நெல்லூரில் சமூக விரோத செயல்பாடுகள் நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது எனவே இதனை முதல்வர் அவர்கள் தலையிட்டு மதுபான கடை அப்புறப்படுத்த வேண்டும் என கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *