
திருநெல்வேலியில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடைபெற்ற, மாவீரர் தினம்!
திருநெல்வேலி மாவட்ட, “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்” சார்பில், “மாவீரர் தினம்” வீரவணக்க நிகழ்ச்சி, கடைப்பிடிக்கப்பட்டது. தமிழ் ஈழ விடுதலை போராட்ட களத்தில்,”வீர மரணம்” அடைந்த, ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளுக்கு, “வீரவணக்கம்” செலுத்தும் நாளாக, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.””முதல் களப் போராளி”யான சங்கர் மறைந்த, நவம்பர் மாதம் 27 -ஆம் தேதி தொடங்கி, ஒரு வாரகாலம் “மாவீரர் தினம்” கடைபிடிக்கப்பட வேண்டுமென, “தேசிய தலைவர்” பிரபாகரன் 1989-ஆம் ஆண்டில் கட்டளை பிறப்பித்தார். அதனை தொடர்ந்து அந்த ஆண்டிலிருந்து, மாவீரர் தினமானது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால், கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்ட “தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்” சார்பில், “வீரவணக்கம்” செலுத்தும் நிகழ்ச்சி, திருநெல்வேலி பாளையங்கோட்டை மகாராஜா நகரில், திருநெல்வேலி மண்டலத் தலைவர் கண்மணி மாவீன் தலைமையில், “எரியும் மெழுகுவர்த்தி” ஏந்தியும், மலர்தூவியும் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் அருண்பிரின்ஸ், தலைமை நிலைய செயலாளர் “கல்குறிச்சி”சேகர், மாநகர் மாவட்ட இணைச் செயலாளர் சின்னத்துரை பாண்டியன், இளைஞர் அணி செயலாளர் தங்கராஜ் பாண்டியன், இளைஞர் அணி இணைச்செயலாளர் மணிமாறன், மாணவர் அணி செயலாளர் பொன்முருகன், வழக்கறிஞர் அணி ஆரோக்கிய சிங்கராயன்,முத்து குமார் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பீட்டர், மகளிர் அணி கண்மணி சர்மிளா, ராஜேசுவரி, முத்து ஆகியோர், கலந்து கொண்டனர்