March 2, 2026
பழனியில் போக்குவரத்து துறையும் ட்ராபிக் காவல்துறை இணைந்து பெர்மிட் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்

பழனியில் போக்குவரத்து துறையும் ட்ராபிக் காவல்துறை இணைந்து பெர்மிட் இல்லாத ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்

பழனி நவம்பர் : 13

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் டிராபிக் போலீஸ், வட்டார போக்குவரத்து துறை இணைந்து ஆட்டோக்களின் ஆவணங்களை சரிபார்த்தனர். இதில் பெர்மிட் இல்லாத 3 ஆட்டோக்கள் பிடிபட்டது.

பழனி ஆர் ப் ரோடு. கான்வென்ட் ரோடு. ஸ்கூல் பகுதிகள். ரயில்வே நிலையம். வணிக வளாகம். பஸ் நிலையம் போன்ற பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. வரி ஏய்ப்பு செய்து ஆட்டோக்கள் ஒடுவதாக கிடைத்த தகவலின்பேரில் பழனி டிராபிக் இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் மற்றும் பழனி மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதர் இணைந்து பழனியில் பல இடங்களில் பலசோதனை செய்தனர்.

30 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் சோதனை செய்யப்பட்டன . அதில் 3 ஆட்டோக்களில் பெர்மிட் இல்லாமல் ஓடியது கண்டுபிடிக்கப்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார் . ஒவ்வொரு ஆட்டோவிற்கும் தலா ஆயிரத்திற்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பின் வட்டார போக்குவரத்து துறையும், டிராபிக் போலீசாரும் இது போன்ற சோதனையை நடத்தி உள்ளனர். இந்த சோதனையில் டிராபிக் எஸ்.. ஐ கவிதா. எஸ் எஸ் ஐ. உள்ளிட்ட டிராபிக் போலீசார் ஈடுபட்டனர்.

பழனி நிருபர் நா.ராஜாமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *