
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி தொடக்கம் ....
பழனி நவம்பர் : 13
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா 27-ந்தேதி தொடக்கம் ….
03.12.2025 புதன்கிழமை… கார்த்திகை தீபத் திருவிழா …. மற்றும் அன்று மாலை 6 மணிக்கு திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்படும்.
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பல்வேறு திருவிழாக்களில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா முக்கியமான தாகும். அதன்படி இந்த ஆண்டுக்கான கார்த்திகை திருவிழா வருகிற 27-ந் தேதி சாயரட்சை பூஜையில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். டிசம்பர் 2-ந் தேதி மலைக்கோவிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும்.
டிசம்பர் 3-ந் தேதி திருக்கார்த்திகை தினத்தன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மாலை 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மலைக்கோவிலில் 4 மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
இதே போல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன், பூம்பாறை முருகன் கோவில்களிலும் திருக்கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
தெரிந்து கொள்வோம்….






