March 2, 2026
கூடுதல் கட்டிடம்: பூமி பூஜை:

கூடுதல் கட்டிடம்: பூமி பூஜை:

மதுரை:

மதுரை மாநகராட்சி ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி அருள்தாஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில், ஆணையாளர் சித்ரா விஜயன், முன்னிலை வகித்தார்.

மதுரை மாநகராட்சியில், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மிகச்சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றில் சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மக்களை தேடி மருத்துவம், வருமுன் காப்போம் திட்டம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தும் வகையில் புதிய கட்டிடங்கள் மற்றும் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண்.22 அருள்தாஸ்புரம் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையத்தில், தாய்சேய் நல மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ பரிசோதனைக்கு தினசரி அதிகமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள்.

மருத்துவ மனைக்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதலாக கட்டிடம் கட்டுவதற்கு திட்டமிடப் பட்டது. அதன்படி 15வது மத்திய நிதி திட்டத்தின் கீழ் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டுவதற்கான பூமி பூஜை அமைச்சர் தலைமையில்
நடைபெற்றது. குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், நகர்நல அலுவலர் (பொ) மரு.பார்த்திப்பன், உதவி நகர்நல அலுவலர் மரு.அபிஷேக், உதவி செயற்பொறியாளர் காமராஜ், முதன்மை மருத்துவ அலுவலர் மரு.ஸ்ரீகோதை, மாமன்ற உறுப்பினர்கள் மகாலெட்சுமி, கஜேந்திரகுமார் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *