
அடையாளம் தெரியாத சமூக விரோதிகளால் கொட்டப்படும் குப்பை கழிவுகள் மூலம் ஆபத்தான நிலைக்கு சென்று கொண்டிருக்கும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அமரன் பேடு ஏரி...
குன்றத்தூர்
நவம்பர் 12
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அமரம்பேடு கிராமம் உள்ளது விவசாயம் நிறைந்த கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைப் பகுதியான ஏரி உள்ளது.

இந்த ஏரியானது ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் வடபழனி போரூர் செல்லும் மாநில நெடுஞ்சாலை அருகே உள்ளது.
இந்த ஏரி நீர் அமரம்பேடு மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் விவசாயத்திற்கு பெரிதும் பயன்படுகிறது.
இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள கால்நடைகள்,நீர் நாரை, மீன்கள் ,உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் இந்த நீர்நிலைப் பகுதியில் உயிர் வாழ்கின்றன.
இந்நிலையில் யாரோ ஒரு சில சமூக விரோதிகள் இரவோடு இரவாக டன் கணக்கான ஷூ செருப்பு போன்ற கழிவுகள், பால் பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள், வீடுகளில் பயன்படுத்தக்கூடிய பிரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட கழிவுகள், உணவு கழிவுகள், நீர்நிலைகளை சீர்குலைக்கும், பிளாஸ்டிக் கழிவுகள், மின்சார வயர் கழிவுகள், உள்ளிட்ட கழிவுகள் கொட்டப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ண நேரிடுகிறது மற்றும் அப்பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் வீசுவதாகவும் கூறுகின்றன.
எனவே நீர்நிலை நீர்வாழ் உயிரினங்கள் ஏரி நீரை பயன்படுத்தும் கால்நடைகள் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் சுகாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு கழிவுகளை அப்புறப்படுத்தியும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமரம்பேடு ஊர் கிராம மக்கள் வாகன ஓட்டிகள் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.






