
உடுமலை வருவாய்த்துறை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்
உடுமலை : அக்:30
திருப்பூர் உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் துறையை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் உடுமலை ஒன்றியம் சார்பில் நடைபெற்றது…

இந்த போராட்டத்திற்கு உடுமலை ஒன்றிய செயலாளர் ஜெகதீசன் தலைமையில்,
CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் கி.கனகராஜ் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்…
CPIM உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர் ராஜகோபால், வருவாய் துறையினர் முறையாக செயல்படாததை கண்டித்து உரையாறினார்..

நிகழ்வில் உடுமலை ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள்,கிளை செயலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு நபர்கள் பங்கேற்றனர்.. ஆர்ப்பாட்டத்தில் வருவாய்த்துறையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுதப்பட்டது..






