March 2, 2026
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேவர் திருக்கோயில் உள்ள சிலைக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தினசரி பூஜைகள் நடைபெறுகிறது.

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தேவர் திருக்கோயில் உள்ள சிலைக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து தினசரி பூஜைகள் நடைபெறுகிறது.

கமுதி அக்:-03

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்தில் தேசியத்தலைவர் தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் ஆண்டு தோறும் அக் 28 முதல் 30 ந்தேதி வரை 118 வது ஜெயந்தி மற்றும் 63 வதுகுருபூஜை விழா நடப்பது வழக்கம். அதேபோல 30 ஆம் தேதி தமிழக முதல்வர், மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும் விஷேச நாட்களாக பவுர்ணமி, சஷ்டி, கிருத்திகை, பிரதோஷம்,தைப்பூசம், உள்ளிட்ட நாட்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடப்பதால் மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.அக்டோபர் முதல் வாரத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி, பவுர்ணமி, அக்.20 ஆம் தேதி தீபாவளி பண்டிக்கை, 22 ஆம் தேதி கந்த சஷ்டி தொடக்கம், 27 ஆம் தேதி சூரசம்ஹாரம் என தொடர்ச்சியாக பண்டிகை காலம் வருகிறது. அதனை போன்று இந்தாண்டு 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜை விழா அக்.28 ந்தேதி துவங்க உள்ளது.

இதனால் பொதுமக்கள்,ஆன்மீக வாதிகள் பசும்பொன்னுக்கு வர தொடங்கியுள்ளனர். தேவர் நினைவாலய அறங்காவலர் தலைவர் காந்திமீனாள் நடராஜன் முன்னிலையில் தேவர்சிலைக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி, இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது. பிறகு தீபராதனை நடைபெற்றது. அக்.24 ந்தேதி வரை வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். அக்.24 ஆம் தேதி மதுரை தனியார் வங்கியில் உள்ள தங்ககவசம் எடுத்து வரப்பட்டு அணிவிக்கப்பட உள்ளது என நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன் தெரிவித்தார்.

வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டதால் உள்மாவட்டம் மற்றும் பல்வேறு வெளிமாவட்டங்களிலிருந்து பொதுமக்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் சுழற்சி முறையில் கமுதி காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர். தேவர் ஜெயந்தி விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளை நிர்வாகிகள் பழனி, தங்கவேலு என்ற ரவி, வெள்ளைச்சாமி, அழகுராஜா ஆகியோர் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *