
பெருந்துயரத்திலும் கொண்டாட்டமா? எதிர்ப்பில் நடைபெற்ற நல்லி குப்புசாமிசெட்டியின் பாராட்டுவிழா
சேலத்தில் மத்திய அரசின் ‘பத்மபூஷன்’ விருது பெற்ற நல்லி குப்புசாமி செட்டிக்கு, தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம் சார்பில் 28ந்தேதி ஞாயிற்றுக்கிழமை பாராட்டுவிழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு தமிழ்நாடு பத்மசாலியர் சங்க உறுப்பினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். கரூரில் ஒரு பெரும் துயரம் ஏற்பட்டு 40 உயிர்கள் பலியாகி இருக்கும் இந்த நேரத்தில் கொண்டாட்டம் தேவையில்லை. அரசு விழாக்கள் கூட ஒரு வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். இந்நேரத்தில் தற்போது விழா வேண்டாம் வேறொரு நாளில் விழா நடத்தலாம் என உறுப்பினர்கள் சிலர் சங்கத்தில் முறையிட்டனர்.
அதற்கு அவர்கள் கொஞ்சம் கூட பண்பு இல்லாமல், இறந்தவர்கள் நமது இனமோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ இல்லை. அதனால் விழாவை உடனே நடத்துங்கள் எனக்கூறி சங்க நிர்வாகத்தினர் விடாப்பிடியாக விளம்பர நோக்கத்தோடு விழாவை நடத்தி முடித்தனர்.
நமது பகுதிக்கு அருகிலேயே ஒரு துயரச் சம்பவம் ஏற்பட்டு அதில் 41பேர் பலியாகி 12 மணி நேரத்திற்குள் நாம் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதா என, எதிர்ப்பு தெரிவித்து பத்மசாலியர் சங்க உறுப்பினர் சிலர் விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இந்நிகழ்வு அச்சமூகத்தினர் மத்தியிலும், நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






