
பழனியில் பி.ஆர்.ஜி கல்வி குழுமம் சார்பாக நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்வில் மாணவிகளுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதி உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
பி ஆர் ஜி வேலப்ப நாயுடு கல்வி குழும்மம் சார்பாக பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றன.

தொடர்ந்து பரத நாட்டிய கலை நிகழ்ச்சியில் தமிழன் பெருமையை போற்றும் வகையில் தமிழ் அமிழ்து, குற்றால குறவஞ்சி உள்ளிட்ட காவியங்களின் பரதநாட்டிய கலைகளை சபையில் அரங்கேற்றினர்.
இவ்விழாவில் மாணவி சகஸ்ரா கிரிநாத் மற்றும் விஸ்நதா கிரிநாத் ஆகிய மாணவிகள் சபையில் நடனமாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
தொடர்ந்து சபையில் பரத நாட்டிய கலையை நடன கலையின் மூலம் அறங்கேற்றி அனைவரையும் மகிழ்வித்தனர்.
மேலும் குறவர்களின் பண்பாட்டை போற்றும் வகையில் குறத்தி ஆட்டம் சபையில் அரங்கேற்றினர்.
தொடர்ந்து சபையில் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு பழனி குருகுலம் இசை நாட்டிய நட்டுவாங்க இசை பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் சிவசங்கர் மற்றும் வித்யா சிவசங்கர் ஆகியோர் பாடல்கள் மூலமாக இசைக் கலைஞர்கள் வாயிலாக பரதநாட்டிய கலை அரங்கேற்றினர்.
தொடர்ந்து சிறப்பாக பரதநாட்டிய கலையை தனது திறமையின் மூலம் நிகழ்த்தி காட்டிய மாணவிகளுக்கு இசைப்பள்ளி சார்பாக நாட்டிய சிகந்தி என்ற விருதினை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பாக நடனமாடிய மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்து மகிழ்வித்தனர்..






