
பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் ஓலைச்சுவடி பூஜை மற்றும் ஆடிப்பெருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை...
மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவில் அடிவாரம், பாதவிநாயகர் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்ரீமத் போகர் புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் ஆடி பெருக்கை முன்னிட்டு புலிப்பாணி சித்தரின் கருவழி வாரிசு 13ம் பட்டம் , ஆறுகால் பீடம் துர்கா பீடாதிபதி .சீர் வளச்செல்வர்சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள் ஶ்ரீமத் போகர் பழநி ஆதினம் அவர்கள் தலைமையில் ,ஒலைசுவடிகளுக்கான மலர் வழிபாடு நிகழ்ச்சி மற்றும் தொட்டிச்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், ஶ்ரீமகாகணபதிபூஜை, ஆராதனைகள், மஹா தீபாராதனை, சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் புலிப்பாணி ஆசிரமத்தில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் சித்தர் வழிபாடு பற்றி மருத்துவர் பன்னீர்செல்வம் மற்றும் அதிதி பவுண்டேஷன் நிறுவனர் புவனேஸ்வரி பிரதீப் சொற்பொழிவாற்றினர்.
இந்த விழாவில் ஏராளமான ஆன்மீகவாதிகளும், பக்தர்களும்,
பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டனர். அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.






