
உலகின் குருவாக பாரதம் ஆகிட உன்னத சக்தி வளர்க்கும் RSS நூற்றாண்டு காணும் RSS
பாரத தேசத்தின் மாபெரும் தலைவர்களில் முதன்மையானவரான பாலகங்காதர திலகரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அன்றைய காங்கிரஸ் கட்சியில் மகாராஷ்டிரா மாநில பொறுப்பாளராக இருந்தவர் சுதந்திரப் போராட்ட வீரர் டாக்டர். கேசவ பலிராம ஹெட்கேவர்.
காங்கிரஸ் கட்சி தனது தொண்டர்களை வேலையாட்களை போல் நடத்தியதை கண்டு வருந்தினார்.

சுதந்திரம் வேண்டி கடிதம் போட்டுக் கொண்டிருக்கும் இந்த காங்கிரஸ் இயக்கம் மூலம் நாட்டிற்கு விடுதலை வாங்கித் தர இயலாது என்று அவர் கருதினார்.
எனவே, புரட்சியாளர்களுடன் சேர்ந்து அனுசீலன் சமிதி போன்ற இரகசிய இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றினார்.
பாரத தேசம் விடுதலை பெற ஹிந்துக்கள் அனைவரும் தேசபக்தி, சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஆகியவற்றுடன் ஜாதி பேதம் மறந்து ஒன்றுபட வேண்டும் அதற்காக ஒரு இயக்கம் தேவை என முடிவு செய்தார்.
ஆர் எஸ் எஸ் என்று அனைவராலும் அழைக்கப்படக்கூடிய ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தினை 1925 வது ஆண்டு விஜயதசமி நன்னாளில் Dr.கேசவ பலிராம ஹெட்கேவார் நாக்பூரில் துவக்கினார்.
16 சிறுவர்களை வைத்து கபடி விளையாட்டின் மூலம் சமூக நல்லிணக்கத்தையே உருவாக்கினார்.
நம்மில் சிலரை தொட்டால் தீட்டு, பார்த்தால் தீட்டு என்கின்ற நிலைமை இருந்த காலகட்டத்தில் சிறுவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து உருண்டு கபடி விளையாடுவதன் மூலம் அவர்களுக்குள் ஜாதிய வேறுபாடுகள் மறைந்தது.
தினசரி ஒரு மணி நேரம் உடல், மனம், அறிவு ஆகியவற்றிற்கு பயிற்சி அளிக்கும் ஷாகாவை உருவாக்கினார்
அதன்மூலம் தேசபக்தி, சுய ஒழுக்கம், சேவை மனப்பான்மை, தீண்டாமை ஒழிப்பு, இணைந்து பணியாற்றுதல், மனித நிர்மாணப்பணி அதாவது தனிமனித மாற்றம் மூலம் சமுதாய மாற்றம் ஆகியவை இந்த ஷாகா பயிற்சியில் கற்றுக் கொடுக்கப்பட்டது.
மகாத்மா காந்தி அவர்கள் 1934 வது ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மேலும் 1947 வது ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
இதை ஹரிஜன் என்று தான் நடத்திய இதழில் மகாத்மா காந்தி அவர்களே குறிப்பிட்டிருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்க நிகழ்ச்சியில் ஜனவரி 21,1940 அன்று கலந்துகொண்டு பேசியுள்ளார்.
1947 வது ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் பொழுது பாகிஸ்தானில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட ஹிந்துக்களுக்கு அடைக்கலம் கொடுத்தது ஆர் எஸ் எஸ்.
1962 ஆவது ஆண்டு சீனப்போரிலும் 1971வது ஆண்டு பாகிஸ்தான் போரின் போதும் நமது ராணுவத்தோடு சேர்ந்து ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் உள்நாட்டு போக்குவரத்து பாதுகாப்பு போன்ற பல்வேறு விஷயங்களில் ராணுவத்திற்கு உதவிகரமாக இருந்தனர்.
பாரத ராணுவத்திற்கு உதவி செய்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் சேவைகளை பாராட்டும் விதமாக 1963 வது ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் சீருடை அணிந்த பொறுப்பாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
1971ல் ஒடிசா புயல்,
1977 இல் ஆந்திர புயல்,
1984 இல் போபல் விஷவாயு கசிவு,
1984 டில்லி சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை,
2001 இல் குஜராத் பூகம்பம்,
2004 இல் ஆழிப்பேரலை சுனாமி 2015இல் சென்னையில் பெரும் புயல் மழை 2020 கொரோனா நோய் தொற்று என்று எப்பொழுதெல்லாம் இயற்கை பேரிடர்கள், அசாதாரண சூழ்நிலைகள் நிகழ்கிறதோ அப்பொழுதெல்லாம் முதல் நபராக ஓடி வந்து நிவாரண பணிகளில் தங்களது உயிரையும் ஒரு பொருட்டாக கருதாமல் சேவை பணியில் ஈடுபடுகின்ற லட்சக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஒரே இயக்கம் ஆர்எஸ்எஸ்.
ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் நோக்கம் உலகின் குருவாக பாரதம் உருவாகுதல் என்பதாகும்.
எப்படி ஒரு காலகட்டத்தில் உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு தேசமாக பாரதம் விளங்கியதோ அதே மகோன்னத நிலையை மீண்டும் பாரதமடைய, பாரத மக்களிடையே தேசபக்தியையும் சேவை பண்புகளையும் வளர்ப்பது அவசியம் என்று ஆர் எஸ் எஸ் இயக்கம் நம்புகிறது.
எடுத்துக்கொண்ட பணியில் எந்தவித சமரசமும் இன்றி தனிமனித வெறுப்பு வெறுப்புகளை புறந்தள்ளி 100 ஆண்டுகளாக ஆர் எஸ் எஸ் வெற்றி நடைபோடுகிறது.
ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட காலகட்டத்தில் துவங்கப்பட்ட இயக்கங்கள் முகவரி தெரியாமல் போய் உள்ள காலகட்டத்தில் இன்று ஆர் எஸ் எஸ் உலகம் முழுக்க மாபெரும் விருட்சமாக வளர்ந்து உள்ளது.
உலகின் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக ஆர் எஸ் எஸ் இன்று வளர்ந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் மூலம் ஊக்கம் பெற்ற அமைப்புகள் இன்று ஒவ்வொரு துறையிலும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டிருக்கின்றன.
இன்றைக்கு உலகின் மிகப்பெரிய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்
ஆர் எஸ் எஸ் இன் மாணவர் அமைப்பாகும்.
இன்று உலகின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பாளர் பாரதிய மஸ்தூர் சங்கம் ஆர் எஸ் எஸ் இன் சிந்தனை கொண்ட தொழிலாளர் அமைப்பு.
உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பாரதிய ஜனதா கட்சி ஆர் எஸ் எஸ் இன் சிந்தனை கொண்ட அரசியல் இயக்கமாகும்.
இதுபோல் 35க்கும் மேற்பட்ட துறைகளில் ஆர் எஸ் எஸ் தனித்தனி இயக்கங்கள் மூலம் தேசபக்தியையும் சேவை மனப்பான்மையையும் வளர்த்து வருகிறது.
குறிப்பாக பெண்கள்,மலைவாழ் மக்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளியவர்களின் வாழ்வு வளம்பெற பல வகையான சேவை பணிகளை செய்து வருகிறது.
ஆர்எஸ்எஸ் இல் தேசநலனே முதன்மைக் குறிக்கோளாக வலியுறுத்தப்படுகிறது
சாதாரணமானவர்களை கூட அசாதாரணமான செயல்களை செய்பவர்களாக மாற்றக்கூடிய வேலை முறைகளைக் கொண்டது தான் ஆர்எஸ்எஸ்.
எளிமை, தன்னை முன்னிலைப்படுத்தாமல் தேசத்தை முன்னிலைப்படுத்தும் எண்ணம், சேவை செய்தல், ஏழை எளிய மக்களுக்கு உதவுதல், சுய ஒழுக்கம், கட்டுப்பாடு போன்ற எண்ணற்ற நல்ல குணங்களால் தான் ஆர் எஸ் எஸ் இயக்கம் தனது 100 வது ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் மூலம் மதுரையில் பல லட்சம் பேர் கூடிய முருக பக்தர்கள் மாநாட்டில் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கைகளை மாநாடு முடிந்த பிறகு தாங்களே எடுத்து அடுக்கி வைத்து சென்றதும், மாநாட்டு அரங்கத்தை தாங்களே சுத்தம் செய்தது என முருக பக்தர்கள் மாநாடு ஆர் எஸ் எஸ் இயக்க தொண்டர்களது கட்டுப்பாட்டிற்கும் சுய ஒழுக்கத்திற்கும் உதாரணமான ஒரு மாநாடு என்பது சமீபத்திய உதாரணம்.
மேலும் இந்த நூறாவது ஆண்டில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களுக்கு
ஹிந்து குடும்ப அமைப்பு முறை, சமுதாய நல்லிணக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,
சுதேசிய சிந்தனை, குடிமக்கள் கடமைகள் மேற்குறிப்பிட்டுள்ள ஐந்து அமுதங்கள் அனைத்தையும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் முழுமையாக கடைப்பிடித்து வாழ்ந்து இந்து சமுதாய ஒற்றுமை அதன் மூலம் பாரத தேச வளர்ச்சி இவற்றிற்காக உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து செயல்படுகிறது ஆர் எஸ் எஸ்.
ஆர் எஸ் எஸ் நூறாவது ஆண்டையொட்டி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஆர் எஸ் எஸ் நினைவு தபால்தலையும், நினைவு நாணயமும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் பாரத அன்னையின் படம் பொறிக்கப்பட்டுள்ளது. பாரத தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு அரசாங்கத்தால் வெளியிடப்படக்கூடிய நாணயத்தில் பாரத அன்னையின் படம் பொறிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
அன்பினாலும் தியாகத்தாலும் வளர்ந்த இயக்கம் இந்த ஆர்எஸ்எஸ் இயக்கம்.
இனி வரக்கூடிய 25 ஆண்டுகள் அதாவது பாரத தேசம் விடுதலை பெற்று நூறாவது ஆண்டு வருகின்ற சமயத்தில் இந்த பாரதம் உலகத்திற்கு வழிகாட்டக் கூடிய ஒரு தேசமாக இருக்கும்.
அதற்காக நாம் அனைவரும் இணைந்து தேச சேவை ஆற்றுவோம் என்று ஆர் எஸ் எஸ் வழிகாட்டுகிறது நாமும் அதன் வழி நடப்போம்.
பாரத அன்னை புகழ் ஓங்குக!
வழக்கறிஞர் லி.முத்து ராமலிங்கம் மாநில இணை செய்தி தொடர்பாளர் : ஆர்.எஸ்.எஸ் தென்தமிழகம்.






