
கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு
நண்பர்களே,
கரூர் சம்பவம் மனிதர்களால் உருவாக்கப் பட்ட பேரழிவு, நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. பொறுப்பைத் தட்டிக்கழிக்கவும் முடியாது. ஆனால்- பெண்கள், குழந்தைகள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், தனது கட்சியின் தொண்டர்கள் , ரசிகர்களை பொறுப்பற்ற முறையில் கைவிட்டு மாயமான அக்கட்சியின் நலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தலைமைப் பண்பு இல்லை.
இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்கவும் இல்லை! என்று கரூர் வேலுச்சாமி புரத்தில் கொலைவெறி தாண்டவமாடிய செந்தில் பாலாஜியின் கொடிய சம்பவம் குறித்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதியரசர் என். செந்தில்குமார் கண்டனம் தெரிவித்தருக்கிறார்!
ஒரு கட்சியின் தலைவர் தன் தொண்டர்களைத் திரட்டி; சர்வாதிகார அரசுக்கு எதிராக போராடுகிறபோது அசம்பாவிதம் எந்த வடிவத்தில் ஏற்பட்டாலும் – அவைகளுக்கு முழுப்பொறுப்பும் சம்பந்தப் பட்ட கட்சியின் தலைவர்தான்!
செப்டம்பர் 27 2025 அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில்; இரவு 8 மணிக்கு மின்சாரத்தை அணைத்துவிட்டு , கத்தி- கொடுவாள் போன்ற ரவுடிக்கும்பல் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்; கொலைகார பாவி செந்தில் பாலாஜியால் நடத்தப் பட்டது!
லட்சக்கணக்கில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாத இளைஞர்கள், பெண்கள் வேலுசாமி புரத்தில் திரண்டிருந்தனர்; அவர்களை பத்திரமாக பாதுகத்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு காவல்துறைக்கு இருப்பதை தட்டிக்கழிக்க முடியாது!
முதல் நாள் 350 போலிசார், மறுநாள் 550 போலிசார் என்ற கணக்கை சொல்லவா பொம்மை அதிகாரிகள்?கடந்த இரண்டாண்டுகள் மட்டுமில்லை; ஸ்டாலின் எனும் சோளக்பொள்ளைப் பொம்மை முலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்த பிறகு- தமிழ்நாடு ரவுடிகளின் ராஜ்யமாக மாறிக் கிடக்கிறது!
தடி எடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகிவிட்டான்; டவுசர் பாண்டிகள் உதயநிதி தலைமையில்- டாஸ்மாக் அரசின் சாராயக் கம்பெனியை கொள்ளயடித்ததும்! மணல் மாபியாக்கள் மூலமாக தமிழகத்தை சூறையாடியதும்! மனித உயிர்களை அன்றாடம் காவு வாங்கியதும்! அனைத்து நிர்வாகங்களிலும் ஊழல் புரையோடியதும்! இவைகளை மக்களிடத்தில் கிளப்பி அவர்களின் கோபத்தை கிளறி விட்டிருக்கின்றன- அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி!
விஜயின் தவெக சினிமா ரசிகர்களின் எழுச்சியின் வடிவம்; குடும்பக் கட்சி, வாரிசு , கொள்ளையோ கொள்ளை என்ற ஸ்டாலினின் கொடுங்கோலுக்கு எதிராக களமாட புறப்பட்டிருக்கும் இளம்படை!
பொதுக்கூட்டம் திறந்தவெளியில் நடத்தப்படுவது; இத்தனை பேருதான் பங்கேற்பர் என யாராலும் கணக்கிட முடியாது!
தலைவனுக்கும் தொண்டனுக்குமிடைய உள்ள ரகசியம் மட்டுமில்லாமல்; ஆட்சிக்கு எதிராக மக்களின் மனநிலையைப் பொறுத்தது!
பொறுப்பற்ற போலிசார்; ஆணவமிக்க அரசு; கிரிமினல் ஆளும் கட்சி- இவைகளின் கூட்டு சதியின் விளைவு, கரூர் கொலைக் களத்தில் 41 தமிழர்கள் பலி!
மகத்தான இளைஞர்களின் எழுச்சியின் தூதுவன் விஜய்; அவர் மாயமானதாக நீதியரசர் சுட்டிக் காட்டலாமா?
வலிக்கிறது மனசு; எப்படி துக்கத்தை வெளிப்படுத்துவது தெரியவில்லை; உங்களோடு நான் இருக்கிறேன்- என்று விஜய் காணொலி வெளியிட்டதற்கு பெயர் பொறுப்பை தட்டிக் கழித்ததாக பொருளா?
மகாத்மா காந்தி, காமராஜர்,அண்ணா, கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பொதுக்காட்டங்கள்; 15 மணி நேரத்துக்கும் மேலாக மக்கள் விடிய விடிய காத்திருந்து நடந்த வரலாறு இருக்கின்றன!
அன்றைக்கு கொலை வெறி பிடித்த செந்தில் பாலாஜிகள் தமிழ் நாட்டில் இல்லை!
திரையுலக நட்சத்திரங்களின் படத்தை பார்க்க ரசிகர்கள் டிக்கெட் வாங்க நெரிசலில் சிக்கி பலியான வரலாற்றை படியுங்கள்!
மொழிப் பொராட்டத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள்; கட்டுப்பாடற்ற இளைஞர்கள்; அந்த களத்தில் போலிசார் , போலிஸ் ஸடேஷன் கொளுத்தப்பட்டன! 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உயிர்ப் பலி!
ஆனால் எந்த நீதியரசரும் அன்றைய தலைவர்களைப் பார்த்து; தலைமைப் பண்பு இல்லை என்று கண்டனம் செய்ததில்லை!
ஸ்டாலின்,உதயநிதி, செந்தில் பாலாஜி போன்ற மனிதக் கழுகுகளின்; அரசியல் பசிக்கு 41 இளம் குருத்துகள் இரையாகி- அரசியல் பிழை நடந்திருக்கிறது!
நீதி தேவதையே; நீ கண்களைத் திற- பலரின் பார்வை மாறும்! நீண்டநெடிய படிக்கட்டுகளில் ஏறிஏறி விழுகிறது, தமிழ் இனம்!






