
பரவையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது
மதுரை பரவை பகுதியில், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழகத்தின் பெருமை, “கப்பாலோட்டி தமிழன்” என போற்றப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் தமிழக அரசின் மான்புமிகு அமைச்சர் திரு. பி. மூர்த்தி அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டு, வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி விழாவை சிறப்பித்தார்.
உடன் பரவை வேளாளர் பெருமக்கள் நலச்சங்கத் தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், முன்னாள் சேர்மன் திரு. மனோகரன், முன்னாள் சேர்மன் திரு. ராஜா, நிர்வாகிகள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று, சுதந்திரத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.






