
உச்ச நீதிமன்றத்தின் ஆணவப் போக்கு!
இந்திய திருநாட்டில் உச்ச நீதிமன்றத்தின் ஆணவப் போக்கு கண்டுகொள்ளாத வழக்கறிஞர்கள் பொதுமக்கள்.
நீதிமன்றத்தில் நீதியை மதிக்க வேண்டும் எல்லோருக்கும் நீதி ஒன்றாக தான் இருக்க வேண்டும் இந்திய அரசமைப்புச் சட்டம் அப்படி அமைக்கப்படவில்லை. சட்டம் எழுதியவர்கள் இயற்றியவர்கள் நூற்றுக்கணக்கான பேர். இதில் அம்பேத்கரை தலைவராக்கி மக்களை ஏமாற்றி இந்திய அரசியல் சட்டம் என்று பெயரிட்டு வழக்காடு மன்றத்தின் நடுவர்கள் தான் நீதிபதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

மேஜி ஸ்ரேட் என்றால் நடுநிலையானவர் என்றுதான் பெயர் நீதிபதி என்பது நீதியை பதிவு செய்பவர் நீதியை இயற்கையோ இறைவனோ உருவாக்கவில்லை மனிதர்களுக்காக மனிதர்கள் உருவாக்கப்பட்டதுதான் அரசியல் சட்டம்.
மன்னர் ஆட்சியில் மன்னன் ஒருவனே நீதி வழங்குவார் நீதியை மக்கள் முன் விசாரித்து உடனடியாக தீர்ப்புகள் வழங்குவார்கள் ஆனால் இந்தியன் பீனல் கோர்ட் அப்படி அல்ல நீதிபதிகள் நினைத்தால் பல வாய்தாக்களை போட்டு மக்களை பல வருடங்களாக இழுத்தடித்து ஒன்று நீதிமன்றத்தை நாடியவர் இறந்து விடுவார் இல்லை குற்றம் சாட்டப்பட்டவர் இறந்து விடுவார் அதற்குப்பின் தீர்ப்பு வரும் அதை நாம் தீர்ப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சட்டத்தை சாதாரண மனிதன் அணுக முடியாத நிலைமையே உள்ளது ஒரு கிராமத்திலிருந்து பத்து வாய்தாவிற்கு வந்து போனால் அவன் நிலைமை என்ன ஆகும் சட்டம் யோசித்ததா இல்லை காரணம் பணம் படைத்தவன் தான் சட்டத்தை வளைக்க முடியும் பாமரன் சட்டத்தின் நிழலில் கூட நிற்க முடியாது.

இட ஒதுக்கீடு என்பதை வைத்து மக்களை சட்டம் ஏமாற்றி ஏழைகளை மீண்டும் ஏழைகளாக்கி கோழைகள் ஆக்கி அரசியல்வாதிக்கும் அரசு அதிகாரிக்கும் அடிமைகளாக்கியது. இந்திய அரசியல் சட்டம் சட்டத்தில் சொல்லப்படும் வார்த்தைகள் புனிதமானது ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது இது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது உண்மையில் இந்திய அரசியல் சட்டம் அப்படியா இருக்கிறது.

பாமரனை கண்டால் சட்டம் பொங்கி எழுகிறது அவனை சிறையில் தள்ளு சட்டத்தை எதிர்த்து பேசுகிறான். அதே அரசியல்வாதியோ அரசு அதிகாரியோ இருந்தால் நீதிமன்றம் கண்டு கொள்வதே இல்லை.
வாய்மையே வெல்லும் சத்தியமாக சொல்லுங்கள் வழக்காடு மன்றத்தில் வாய்மை வெல்லுமா? பொய்மை தான் இன்றுவரை வென்று கொண்டிருக்கிறது.

மக்களை ஏமாற்றுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? நீதிபதிகள் என்ன கடவுளா?உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு. அநீதியாக தீர்ப்பு இருந்தாலும் உச்ச நீதிமன்றம் சொன்னால் அதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.
உண்மையில் இது வேதனையான விஷயம் 140 கோடி இந்திய மக்களின் அவல நிலையை உணராத அரசியல் சட்டம் காவல்துறை சட்டத்துறை கவர்மெண்ட் என்று அழைக்கக்கூடிய அரசுத்துறை, கலெக்டர், சப் கலெக்டர், தாசில்தார், ஆர்டிஓ, சார்பதிவாளர், இப்படி எண்ணற்ற அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கிக்கொண்டு லஞ்சம் பெறுகிறார்கள்.
ஆயிரங்களாக இருந்தது லட்சங்கள் ஆனது லட்சங்கள் ஆனது கோடிகளானது கோடிகளானது பல லட்சம் கோடிகள் ஆனது இந்திய நீதித்துறையே உண்மையைச் சொல் மக்களுக்காக என்றாவது தீர்ப்பு வழங்கியிருக்கிறாயா? இல்லை பணம் படைத்தவனிடம் விலை பேசி சட்டத்தை விற்பனை செய்யும் வழக்கறிஞர்கள் அதற்கு துணை போகும் நீதிமான்கள் உள்ள தேசம் இந்திய தேசம்.
உச்ச நீதிமன்றம் செய்யும் அநியாயமும் அட்டூழியமும் ஏட்டில் எழுத முடியாது தற்பொழுது தமிழகத்தில் நடைபெறும் திமுக அரசின் செயல்பாடுகள் உலகமே காரி துப்புகிறது சென்னை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பை கொடுக்கிறது சுப்ரீம் கோர்ட் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை கொடுக்கிறது சென்னையில் நடக்கும் கொடுமைகளை அநியாயங்களையும் அட்டூழியங்களையும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரியும் உச்ச நீதிமன்றத்திற்கு தெரிய வாய்ப்பில்லை உச்ச நீதிமன்றத்தில் பல கோடிகள் பெற்று பல வழக்கறிஞர்கள் ஒரு வழக்குக்கு ஆஜராவார்கள் நீதிமான்கள் அவர்களைப் பார்த்து மிரண்டு போய் தீர்ப்பை அவர்களுக்கு சாதகமாக வழங்குவது சுதந்திரமடைந்ததிலிருந்து சட்டம் தன் கடமையிலிருந்து தவறிப் போய்விட்டது.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் சுப்ரீம் கோர்ட் மட்டும் மக்களை அடிமைப்படுத்தும் சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் மக்களுக்கு மட்டும்தான் உள்ளது அரசு அதிகாரிக்கோ அரசியல்வாதிக்கோ ஏன் நீதிமன்றத்துக்கு கூட கிடையாது.
வளர்ந்த நாடுகள் யுனைடெட் ஸ்டேட் ஆப் அமெரிக்கா, கனடா, ஜெர்மன், போன்ற நாடுகளில் சட்டம் மக்களுக்காக உள்ளது. அங்கு உள்ள அனைத்து மக்களும் சட்டத்தை எதிர்த்து போராடுவார்கள் இங்கு இழி நிலையில் இருக்கும் மக்கள் தான் சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் இது முடியாத காரியம் ஆதலால் தான் சமீப காலமாக உச்ச நீதிமன்றம் கேட்பாராற்று போய் தீர்ப்பை தாறுமாறாக வழங்குகிறது.
140 கோடி மக்கள் தொகையில் உள்ள நாட்டில் மக்கள் பொங்கி எழுந்தால் உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றம் என்ன ஆகும். நினைத்துப் பாருங்கள்? மக்களை கொன்று குவிக்க ராணுவம் வரலாம் நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம் இதுதான் உங்கள் ஆணவப் போக்குக்கு காரணம் கேப்பாரேற்று போன தேசம் உலகில் இந்தியாவை போல் ஒரு கேடுகெட்ட தேசத்தை நான் ஏட்டிலும் படித்ததில்லை.
ஒரு இந்தியனாக நேதாஜி, பசும்பொன் தேவர் ஐய்யா போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களால் நேசித்தோம் இன்று நிலைமை மோசமாகிவிட்டது. வெள்ளைக்காரனை எதிர்த்து போராடிய போராட்ட வீரர்கள் வாரிசு கூட யாரும் இல்லை.
ஆதலால் உச்ச நீதிமன்றம் செய்யும் அநாகரிக செயல் இந்திய தாய் திருநாட்டை ஒரு நாள் அளிக்கும் என்பது திண்ணம் 2010 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருக்கும் போது தனியார் மதுபான கடையை டாஸ்மாக் என்று பெயரிட்டு அரசுடைமை ஆக்கினார். அதே நாளில் அமெரிக்காவில் ஒரு கொலை குற்றவாளியை நான்கு பேர் கொண்ட பெஞ்ச் விசாரணை செய்து தூக்குத் தண்டனை விதித்தது. அந்தக் குற்றவாளியை பத்திரிக்கையாளர்கள் பேட்டி எடுக்கிறார்கள் நீங்கள் குற்றம் செய்தீர்களா என்று கேட்கிறார்கள் இல்லை நான் அந்த குற்றத்தை கொலையை செய்யவில்லை எனக்கு தவறான தீர்ப்பை முட்டாள் நீதிபதிகள் கொடுத்து விட்டார்கள் என்று குற்றவாளி தன் உள்ள குமுறலை பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்!
இதை பேட்டி கண்ட பத்திரிக்கையாளர்கள் அந்த நீதிபதிகளிடம் சென்று நீங்கள் தவறான தீர்ப்பு கொடுத்ததாகவும் நீங்கள் முட்டாள்கள் என்றும் குற்றவாளி கூறினார் என்றார்கள் அதற்கு அந்த நீதிபதிகள் அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை நாங்கள் ஆதாரங்களை வைத்து தீர்ப்பு வழங்கினோம் உண்மையிலேயே அவன் குற்றமற்றவனாக இருக்கலாம் ஆனால் நாங்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கினோம் என்றால் அவன் நிரூபிக்க வேண்டும் அப்படி எதுவுமே குற்றவாளி சொல்லவில்லை ஆதலால் நாங்கள் வழங்கியது ஆதாரத்தின் அடிப்படையிலான தீர்ப்பு அதை நேர்மையான தீர்ப்பு என்று நாங்கள் கூற மாட்டோம் இதுதான் நீதியின் பரிமாணம்.
இங்கு இருக்கும் நீதிபதிகள் நல்லவர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது இதே நிலைமை நீடித்தால் ஒரு நாள் இயற்கை பேரிடரால் மக்கள் விடும் சாபம் நாடு நாசமாகி போகும் மானம் கெட்ட மனிதனின் வாழ்க்கை பணம் மட்டுமே வாழ்க்கை ஆகிவிட்டது.
ஆண் பெண் உறவில் தவறிய ஆணுக்கும் பெண்ணுக்கும் விபச்சாரி என்று பட்டம் கட்டிய இந்த தேசத்தில் நீதி பரிவாளத்தில் இவ்வளவு கேவலங்கள் இருக்கிறது. இதற்கு என்ன பெயர் வைப்பது நீதியரசர்களே கூறுங்கள்.
முருகன் சுதந்திர இந்தியா காலை நாளிதழ் வெப்சைட் என் மீது குற்றம் இருப்பின் வழக்கு தொடுங்கள். எங்கும் என்னை தேட வேண்டாம் நீதியை மதிப்பவன் அநீதியை எதிர்ப்பவன் என் தொலைபேசியில் அழையுங்கள் தொடர்பு எண் : 9791221893/9442613788.