March 4, 2026
சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு! நிழல் டெண்டரான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மகேந்திரன். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.

சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு! நிழல் டெண்டரான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மகேந்திரன். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.

நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணிகள் தொடர்பான டெண்டர்கள் பொதுவாக மின்னணு முறையில் (e-tender) வெளியிடப்படும். இந்தத் டெண்டர்கள், e-tender முறை மூலம் வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்படுகின்றன.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் , மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 20க்கும் மேற்பட்ட சாலை பராமரிப்பு பணிகள் சுமார் 80 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பீட்டு அளவில் பணி நடந்துள்ளது.

அதில், துங்காவி – பூளவாடி சாலை , பொள்ளாச்சி – தாராபுரம் கரூர் சாலை, உடுமலை – பல்லடம் சாலை , காரத்தொழுவு – குமரலிங்கம் சாலை , துங்காவி – மடத்துக்குளம் சாலை , நீலம்பூர் – அமராவதி சக்கரை ஆலை ரோடு ஆகிய 20க்கும் மேற்பட்ட சாலை பராமரிப்பு பணிகள் செய்துள்ளனர்.

சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு! நிழல் டெண்டரான நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மகேந்திரன். நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்?.

நெடுஞ்சாலைத்துறை சார்பில் செய்து முடித்த பணிகளில் உதவி பொறியாளர் மகேந்திரன் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

முறையான டெண்டர் அறிவிப்புகள் வெளியிடாமல் குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து ஒப்பந்ததாரர்கள் பெயர்களில் டெண்டர்களை மகேந்திரன் செய்து முடித்துள்ளார்.

சாலையோரத்தில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு , தார் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல் குழிகளை முறையாக பராமரிப்பு செய்யாமல் பெயரளவில் மட்டுமே செய்துள்ள அவர், ஒப்பந்ததாரர்களுக்கு கணிசமான தொகையை கொடுத்து டெண்டர் சம்பந்தமாக பணிகளை முடித்துள்ளார்.

அதன்படி பார்த்தால் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டதில் , 50% சதவிகித வேலையை மட்டும் செய்துள்ளனர். சாலை பராமரிப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டதில் 30 முதல் 40 லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் பெயரில் தொடர்ந்து கல்லா கட்டும் உதவி பொறியாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் விசாரணை செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலையில் நடந்து வரும் முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உதவி பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் சில லெட்டர்பேடு கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சமீபத்தில் உதவி பொறியாளர் மகேந்திரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *