March 2, 2026
பழனியில் மக்கள் நலன் காக்கும் மருத்துவ முகாமில் மக்கள் நலன் கேள்விக்குறி.?

பழனியில் மக்கள் நலன் காக்கும் மருத்துவ முகாமில் மக்கள் நலன் கேள்விக்குறி.?

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, பழனி பெருநகராட்சி இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இம்முகாமில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார். பழனி பெருநகராட்சி ஆணையர், வார்டு கவுன்சிலர்கள், மற்றும் பயனாளிகள் என கட்டுக்கடங்காத கூட்டம் வருகை தந்துள்ளது.

மருத்துவ முகாம் என்பதால் நோயாளிகள் பலர் சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். மருத்துவ முகாமிற்கு வருபவர்களுக்கு தகுந்த முன் ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை எனவும் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க மாஸ்க் போன்ற உபகரணங்கள் ஏதும் தரப்படவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெயிலின் தாக்கம் அதிகம் கானபடுவதுடன் கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக முன்னேற்பாடுகள் ஏதும் செய்யப்படவில்லை கூட்டம் வந்த பின்னரே நிழல் குடைகள் அமைக்க ஆயத்தமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *