March 5, 2026
மண் - மணல் கடத்தும் மாஃபியா கும்பலுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உடந்தையா.?

மண் - மணல் கடத்தும் மாஃபியா கும்பலுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் உடந்தையா.?

சமூக ஆர்வலர்கள் கேள்வி..?

திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பூட்டு தான். ஆனால், தற்போது திண்டுக்கல் மாவட்டம் என்றாலே கொலை , கொள்ளை என குற்ற சம்பவங்கள் தான் நினைவுக்கு வருகிறது‌. அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவி வருகிறது.

ஒருபுறம் சட்ட ஒழுங்கு சீர்குழைக்க நினைக்கும் குற்றவாளிகளை கைது செய்து குற்ற சம்பவங்களை தடுக்க மாவட்ட காவல்துறை போராடி வருகிறது. ஆனால், அதற்கு நேர்மாறாக மாவட்ட ஆட்சியர் சரவணன் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குளம் , குட்டை , ஓடை , வாய்க்கால் , ஆறுகளில் அனுமதியின்றி செம்மண், மணல் , மண் கடத்துவதாகவும், நாள்தோறும் பல லட்சம் மதிப்புள்ள கனிமங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக மாவட்ட அலுவலகத்திற்கு புகார் சென்றுள்ளது. அப்படி சென்ற பிறகும் மண் கடத்தலை தடுக்காமல் மாவட்ட நிர்வாகமும் அமைதி காத்து வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராஜப்பா என்பவர் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மண் எடுப்பதற்கு அரசு பெற்றுள்ளதாக கூறி பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக மண் எடுப்பதோடு , தமிழ்நாட்டில் இன்னும் சில மாவட்டங்களில் அரசிடம் இருந்து மணல் குவாரி காண்ட்ராக்ட் பெற்று இருப்பதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் ஓம் சக்தி என்ற பெயரில் செயல்படும் அலுவலகத்தில், தமிழ்நாடு முழுவதும் பண வசூல் செய்ததாக கூறுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொருத்தவரை அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மாதம் கோடி வரை கனிம வளத்தை கொள்ளையடித்து வருவதாக இவர்மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் அரசுக்கு வரவேண்டிய பல கோடி வருமானம் ஒவ்வொரு மாதமும் பாதிக்கப்படுகிறது‌. மண் , மணல் , கொள்ளை என ஆரம்பித்து மலைக்குன்று பகுதிகளையும் விட்டுவைக்காத கொள்ளையர்கள் மீது மாவட்ட ஆட்சியர் சரவணன் நடவடிக்கை எடுக்க தவறுவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அத்துடன் மண் கடத்தல் கும்பல்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக சந்தேகிக்கின்றனர். இயற்கை வளம் சார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தை கூறு போட்டு விற்பனை செய்யும் மண் , மணல் மாஃபியா கும்பல்களிடம் மறைமுகமாக மாமூல் வாங்கிக்கொண்டு ஆதரவாக செயல்படும் மாவட்ட நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க போவது யார்‌.? எப்போது முடிவுக்கு வரும் மண் மணல் கொள்ளை என பல கேள்விகளை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *