June 1, 2026
பழனியில் தவெக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு: பொதுமக்கள் நெகிழ்ச்சி!

பழனியில் தவெக சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு: பொதுமக்கள் நெகிழ்ச்சி!

பழனி, ஜூன் 01: திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவிற்கிணங்க, கோடைகால வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு பொதுமக்களுக்கான நீர்மோர் பந்தல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோடையின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைக் காத்துக் கொள்ளும் வகையில் குளிர்ந்த நீர்மோர், இளநீர் மற்றும் தூய்மையான குடிநீர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டன.

கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு: இந்த நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் பழனி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட, நகர, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் தவெக தொண்டர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தங்கள் பகுதிக்கு வந்த பொதுமக்களின் தாகம் தீர்க்கும் இந்த நற்பணிக்கு, அப்பகுதி மக்கள் தங்களது மனமார்ந்த பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *