March 2, 2026
மகிழ்வோம்!

மகிழ்வோம்!

வானதன் உள்ளே வழியதன் உள்ளே வருவன உள்ளே வழிவன உள்ளே
கூடதன் உள்ளே குவிவன உள்ளே குளிப்பன உள்ளே குவிவான் உள்ளே
படுவன உள்ளே பகுப்பன உள்ளே பகல்வன உள்ளே படுப்பன உள்ளே..
உள்ளன உள்ளே உறைவன உள்ளே உழன்றதன் உள்ளே இருப்பன உள்ளே
காண்பண உள்ளே கண்ணில் படுவன உள்ளே பெரிதென உள்ளே பெரியன உள்ளே
நாமதன் உள்ளே நண்டென உள்ளே நானிலம் உள்ளே இருப்பன உள்ளே இயல்பென உள்ளே இருப்பன உள்ளே இயங்கின உள்ளே வாழ்வன உள்ளே
அளந்தன உள்ளே ஆயின உள்ளே அறிவன உள்ளே ஆனது இன்றதன் உள்ளே!
பலப் பலவாக பகலெவன வாக இரவொடு பகலாய் திரிவன பலவாய் பலவாய்..
பார்த்தது கொஞசம் பயின்றது நெஞ்சம் வடித்தது கொஞசம் வருவன கொஞ்சம்..
அறிவன கொஞ்சம் அறிந்தது கொஞ்சம் அடை மழையாக வந்து நனைத்தன கொஞ்சம்
வானது விரிந்து வழிநடை பயின்று அண்டங்களாகி அகிலங்கள் கடந்து
நோக்கது நோக்காய் நுழைந்து அகன்று நொடி நொடியாக காலங்கள் கடந்து
விரிந்து விரிந்து விண்ணகமாக விளை வித்திருந்து பல் கனங்களாக ஓங்கித் தாரகைகள் மின்மினிகளாக
கட.. கட..உள்.. உள் கட.உள் கடவுள் என்பதன் பொருள்தான் நெஞ்சம் கண்டிட தனே திருவும் அதனுள்!,,
கண்டு கண்டு மகிழ்வுற்றிருந்து கண்டவர் முனனோர் கணித்ததே அண்டங்கள் ஆமே..

பாவலர் மு இராமச்சந்திரன்
தலைவர் தமிழர் தன்னுரிமைக் கட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *