
வாடிப்பட்டி பேரூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள்
வாடிப்பட்டி, ஆக.27-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் மற்றும் சோழவந்தான் தொகுதி தே.மு.தி.க சார்பாக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடியேற்றி பஸ் நிலையத்தில் விஜயகாந்த் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து இனிப்பு வழங்கி மற்றும் இலவச கண் மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகராஜ், தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார், அலங்காநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அழகர்சாமி, அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பிச்சைமணி, மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாடிப்பட்டி பேரூர் அவை தலைவர் காளவாசல் கோபால் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலச்சந்தர் கொடியேற்றி விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி மருத்துவ முகாமை துவக்கி வைத்து அன்னதானம் வழங்கினார்.

இதில் மாவட்ட அவை தலைவர் நல் கர்ணன், மாவட்ட கழகத் துணைச் செயலாளர்கள் தங்கராஜ், டாக்டர் பொன் யாழினி பாலாஜி, முன்னாள் பேரூர் செயலாளர்கள் மாரியப்பன் ,ஜெயராஜ், சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் கண்ணம் மாள், மாவட்ட மாணவரணி துணை செயலாளர், கிருஷ்ணன், தொண்டரணி துணைச் செயலாளர் சூரிய பிரகாஷ், மாவட்ட தொண்டரணி துணைச் செயலாளர் பவுன் பாண்டி,வாடிப்பட்டி பேரூர் துணை செயலாளர்கள் அரிமலை,
தமிழன் என்ற முருகன், பி பி முருகன் ,சங்கு பிள்ளை பேரூர் பிரதிநிதிகள் மூர்த்தி, கார்த்திக் , வைக்கோல் முருகன், தாஸ், எலக்ட்ரிஷன் முத்துப்பாண்டி நிதர்சன் ஹரி ,ராஜேஷ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேரூர் பொருளாளர் சோமநாதன் நன்றி கூறினார்.






