
கோயிலுக்குள் கடைகள் எப்படி அனுமதிக்கப்படுகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Dr. மிலிண்ட் ஹிரவே மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் (CPTM) Dr Milind Hirwe ( Chief Passenger Transportation Manager, Central Railway, CSMT, Mumbai) இன்று மும்பை விழித்தெழு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் தமிழன் சந்தித்து தீபாவளிக்கு மும்பை -தென்தமிழகம் இடையே (வழி) மட்கோவ் (கோவா) மங்களூர்,கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லைக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
தீபாவளி சிறப்பு ரயிலுக்கான முன்மொழிவை (Proposal) மத்திய ரயில்வே தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர், தென்னக ரயில்வேக்கு அனுப்புவதாக உறுதியளித்துள்ளார்.
இது புது வழித்தடம், மொத்த 1640 கிலோமீட்டர், மொத்த பயண நேரம் 27 மணி நேரம் . இந்த பாதையில் ரயில்களை இயக்கினால் இயற்கை சூழ்ந்த மலைப்பாதையில் அழகான காட்சிகளை ரசித்தவாறு விரைவாக தென் தமிழ்நாட்டிற்கு செல்ல முடியும். மக்கள் கூட்டநெரிச்சல் குறைவதுடன் சுற்றலாத்துறை வளர்ச்சியடையும். எந்த நேரத்தில், வழித்தடத்தில் இயக்க வேண்டும் போன்ற தகவல்களை பரிந்துரையாக சந்திப்பில் வழங்கப்பட்டது.
கடந்த 2024 ஆண்டு வைத்த கோரிக்கை , மத்திய ரயில்வே Proposal பரிந்துரை செய்தது , இதற்கு தெற்கு ரயில்வே , கொங்கன் ரயில்வே Concurrence ஒப்புதல் தந்து ஏற்றுக்கொண்டது. பின்னர் மராட்டிய தேர்தல் நேரம் என்பதால் ரயில் பெட்டிகள் இல்லை என இறுதியில் நிறைவேறாமல் போனது போன்ற தகவல்கள் சந்திப்பில் பகிரப்பட்டன.
கூடுதலாக ..புதிய வழிப்பாதை திருவனந்தபுரம் – மும்பை (வழி ) கொல்லம், புனலூர், செங்கோட்டை, தென்காசி, திருநெல்வேலி, கோவில்பட்டி, மதுரை, கரூர், சேலம், ஓசூர், பெங்களூரு, ஹூப்ளி, பெல்கவி, சங்கிலி, சதாரா, புனே, கல்யாண் மும்பை .
மும்பை – நாகர்கோவில் ரயில் நேரத்தை மாற்றி நள்ளிரவு 12 மணி அல்லது அதிகாலை 6 மணிக்கு இயக்குவது; நிறுத்தப்பட்ட மும்பை -கன்னியாகுமரி ரயில் பழைய வழிப்பாதையில் இயங்குவது; மும்பை யிலிருந்து தமிழ்நாட்டுக்கு ராஜ்தானி, கரீப் ரத் ,வந்தே பரத் போன்ற குளிரியூட்டப்பட்ட அதிவேக ரயில் இயக்குவது ; மும்பை -ராமேஸ்வரத்துக்கு ரயில் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன.






