
தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா தாராபுரத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தேமுதிக நிறுவனத் தலைவர், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், மக்களால் நேசிக்கப்பட்ட நடிகர், மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 73-வது பிறந்தநாள் விழா, திருப்பூர் தெற்கு மாவட்டம் சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில், அண்ணா சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கேப்டன் விஜயகாந்தின் திருவுருவப் படத்திற்கு, மலர் மாலையணிவித்து, மலர் தூவி, அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, 500-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல், பூளவாடி சாலை, மதுக்கம்பாளையம் பிரிவு, காளிபாளையம், கொளத்துப்பாளையம், கரையூர், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில், ஏழை எளிய மக்களுக்காக பல்லாயிரக்கணக்கானோருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகள் ஏழை மக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை, தாராபுரம் நகர கழக செயலாளர் ரா.ச. ரஞ்சித்குமார், ஒன்றிய கழக செயலாளர் மோ. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். இதில், மாவட்ட கழக பொருளாளர் அண்ணாதுரை, துணை செயலாளர் கந்தசாமி, குண்டடம் பேரூர் கழக செயலாளர் பிரகாஷ், கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் முருகன், சின்னக்கம்பாளையம் பேரூர் கழக செயலாளர் சௌந்தர்ராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா, செயற்குழு உறுப்பினர் கிரி, பொதுக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், பெரியசாமி, கேப்டன் டிவி முனியப்பன், நகரத் தலைவர் தண்டபாணி, துணை செயலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கல் பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஊடக பேட்டியளித்த மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம், “கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஒரு சாதாரண அரசியல்வாதி அல்ல, அவர் தமிழக மக்களுக்கு உண்மையான சேவை செய்த தலைவன், அரசியலில் நேர்மையும் தெளிவும் கொண்டவர், எப்போதும் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு தீர்வு காண முனைந்தவர், சாதி மத வேறுபாடுகளை தாண்டி அனைவரையும் சமமாக நேசித்தவர், ஏழை எளிய மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகளில் எப்போதும் குரல் கொடுத்தவர், அரசியலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும், மக்களின் நலனுக்காக கடுமையான எதிர்ப்பு தெரிவித்து அரசைச் செயல்படச் செய்தவர்” எனவும், “அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மக்களின் நலன் கருதி நடத்தப்படுவது, அவரின் அரசியல் வாழ்க்கை எத்தனை தலைமுறைக்கும் ஒரு பாடமாக இருக்கும்” எனவும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்டோர் தேமுதிக கழகத்தின் தங்களை இணைத்துக் கொண்டனர்.






