
தேமுதிக தலைவர் பிறந்த தினம்:
உசிலம்பட்டி:
மதுரை, உசிலம்பட்டியில், தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி தேமுதிக நிர்வாகிகள் கொண்டாடினர்.

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் – ன் 73 -வது பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள தேமுதிக நிர்வாகிகள் வறுமை ஒழிப்பு தினமாகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் ,
விஜயகாந்த் ஆன்மா சாந்தியடைய வேண்டி மூல ஸ்தானத்தில் உள்ள முருகன் சிலைக்கு பால், பன்னீர் அபிஷேகங்கள் செய்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் தேமுதிக நிர்வாகிகள் வழிபாடு செய்தனர்.
தொடர்ந்து, முருகன் கோவில் முன்பு தேமுதிக உசிலம்பட்டி தொகுதி பொருப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான நிர்வாகிகள், பொதுமக்களுக்கு லட்டு பூந்தி உள்ளிட்ட இனிப்புகளையும், உணவாக கேசரியும் வழங்கி கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாளை அனுசரித்து கொண்டாடினர்.
இதில், மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் எம்.எஸ். மாணிக்கம், கருமாத்தூர் பாண்டி, நகர் கழகச் செயலாளர் அசோகன்,ஒன்றிய கழகச் செயலாளர் ஒ. எஸ்.டி.சமுத்திர பாண்டி,மாவட்ட தொண்டர் அணி செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட கேப்டன் மன்ற துணைச் செயலாளர் செல்வம்,நகர் கழக பொருளாளர் அழகர் ராஜா, முன்னாள் தேமுதிக ஒன்றிய கவுன்சிலர் வாசக ராஜா,ஒன்றிய துணை செயலாளர் ராமர், நகர அவைத் தலைவர் முருகன், நகர் கழக மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், நகர் கழக துணைச் செயலாளர் ராம் பிரபு, நகரதுணைச் செயலாளர் சித்ரா, கழக துணை செயலாளர் பாண்டியம்மாள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






