March 2, 2026
வயநாடு சோகம்!

வயநாடு சோகம்!

இங்கு வயநாடு சோகம் என கண்ணீர் வடிக்கும் அதேசமயத்தில் நாம் எத்தனை பேர் ஆழ்துளை கிணறுகளின் எதிர்கால நிலச்சரிவு அபாயத்தை உணர்கிறோம் என்பது தெரியவில்லை.

ஆம் இன்றைய நிலையில் நம்மில் ஒருவர் வீடு கட்டுகிறார் எனில் முதலில் போர்தான் போடுகிறோம்.

ஒரு 30 வருடங்களுக்கு முன்பு ஒரு கிராமத்திற்கே இரண்டு மூன்று குடிநீர் கிணறுகள் ( உள்படம்) என்றிருந்த நமது வாழ்வியல் ஆனது தற்போது ஒரு ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 வீடுகள் உருவாகையில் 15 ஆழ்துளை கிணறுகள் தோன்றுகின்றன.

நிலத்தடி நீர் அறிவியலில் கூம்பு அழுத்தம் (படம்) என்பது மிகவும் முக்கியமானது ஆகும். இந்த கூம்பு அழுத்தம் ஆனது நாம் நீரை உறிஞ்ச உறிஞ்ச நிலத்தடி மண் அமைப்பை (unsaturated zone) கீழ் நோக்கி இழுக்கக்கூடிய விசை விளைவை குறிக்கிறது.

இன்னும் ஒரு 100-200 வருடங்களில் நாம் மேற்கூறிய ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 15 ஆழ்துளை கிணறுகளின் செயல்பாடு ஆனது கண்டிப்பாக கூம்பு அழுத்த விசை காரணமாக அந்த ஒரு ஏக்கரினையும் உள்ளே இழுத்துக் கொள்கையில் அப்போதைய நமது பேரக்குழந்தை தலைமுறை ஆனது தற்போதைய வயநாடு சோகம் போன்ற பதிவுகளை இங்கு பகிர்ந்து தங்கள் சோகத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *