March 2, 2026
நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தேசிய கொடி ஏற்றிய விவசாயக் கூலித் தொழிலாளி பொதுமக்கள் வரவேற்பு

நிலக்கோட்டை அருகே கோட்டூர் ஊராட்சி அலுவலகம் முன்பு தேசிய கொடி ஏற்றிய விவசாயக் கூலித் தொழிலாளி பொதுமக்கள் வரவேற்பு

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின இந்திய நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சாதாரண குடிமகன் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவது என்பது பொதுமக்களால் வரவேற்பு பெற்றுள்ளது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கோட்டூர் ஊராட்சி, மைக்கேல் பாளையத்தை சேர்ந்தவர் ராசு வயது 82. விவசாயக் கூலித் தொழிலாளி ஆவார். இவர் கிராமத்தின் முதியவர். இவரை ஊராட்சி நிர்வாகம் கௌரவிக்கும் வகையில் சாதாரண குடிமகனும் தேசிய கொடியை ஏற்ற வழிவகை செய்ய வேண்டும் என்று கிராம ஊராட்சி நிர்வாக முடிவு செய்தது. அதன்படி கூலித் தொழிலாளி , கிராமத்தின் முதியவருமான ராசு கௌரவிக்கும் வகையில் தேசியக் கொடியை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஏற்ற வைத்து கிராம மக்கள் அழகு பார்த்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன், கிராமப் பொதுமக்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்திய நாட்டின் சுதந்திர நாள் சுதந்திரத் தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பிரதமர்,முதலமைச்சர் , அமைச்சர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பேரூராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றிக் கொள்ளும் அந்த நிகழ்ச்சிக்கு சாதாரண கூலித் தொழிலாளிக்கு தேசிய கொடியை ஏற்றக்கூடிய வாய்ப்பை ஏற்பு ஏற்படுத்திக் கொடுத்த பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

தேசியக் கொடியை ஏற்றிய கூலித் தொழிலாளி ராசுக்கு பொதுமக்கள் சார்பாக பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். கிராமத்து விவசாயி தேசியக்கொடி ஏற்றதின் மூலம் இந்த வருடம் சுதந்திர தினம் மிக மகிழ்ச்சியாக உள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *