
தமிழக அரசுக்கு கோரிக்கை.
தமிழனின் வீரக்கலை கலை கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இழந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றன,ஆனால் கராத்தே விளையாட்டுக்கு அங்கீகாரம் இருப்பதாக பொய் சொல்லி தமிழகத்தில் இருக்கும் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் அனைவரையும் ஏமாற்றி கோடி கணக்கில் ஊழல்கள் செய்து, கொள்ளை அடித்து வருகின்ற சங்கம் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டோ அசோசியேஷன் ( TSKA ) சங்கம் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
தமிழக முதலமைச்சர் அவர்கள், விளையாட்டு துறைக்கு கோடி, கோடியாக வாரி வழங்கி வருகின்றார்கள் துணை முதல்வர் விளையாட்டு துறை அமைச்சர் அவர்களும் விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு பணிகளை வழங்கி வருகின்றார்கள்
தமிழகத்தில் கராத்தே விளையாட்டில் அங்கீகாரம் இல்லாத TSKA கராத்தே சங்கம்,ஏழை ,அப்பாவி குழந்தைகள் அனைவரையும்,அரசியல் பலத்தையும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள்
தமிழக அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி வருகின்ற TSKA கராத்தே சங்கத்தை தமிழக அரசு உடனடியாக முறையான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றேன்
தமிழகத்தில் பாலியல் வழக்கில் பதினைத்துக்கும் மேற்பட்ட கராத்தே பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவரும் TSKA கராத்தே சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்
தமிழனின் வீரக்கலை கராத்தே விளையாட்டுக்கு அவமானத்தை உண்டாக்கி வருகின்ற TSKA கராத்தே சங்கத்தின் தலைவர் ஜேக்கப் அவர்களும்,செயலாக அல்தாப் அவர்களும் உடனடியாக தங்களது பொறுப்பில் இருந்து விலகிட வேண்டுமென்று,கராத்தே வீரர்கள் வீராங்கனைகள், பெற்றோர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்
கராத்தே வீரர்கள் வீராங்கனைகள் பாதுகாப்பு நலசங்கத்தின் தலைவர்
தனசேகரன்






