March 3, 2026
அலங்காநல்லூர் அருகே, வாவிடமருதூர் ஊராட்சியில், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல்.ஏ. சொல்லியும், கேட்காத அதிகாரிகளால் பரபரப்பு.

அலங்காநல்லூர் அருகே, வாவிடமருதூர் ஊராட்சியில், நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி எம்.எல்.ஏ. சொல்லியும், கேட்காத அதிகாரிகளால் பரபரப்பு.

சோழவந்தான்.

தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், முகாமில் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மகளிர் உரிமை தொகைக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும் என , அரசு தரப்பில் மறைமுகமாக அதிகாரிகளுக்கு கூறியுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டு வருகிறது .

ஆகையால், மற்ற கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் தரும் மனுக்கள் மீது அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது . மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே வாவிடமருதூர் ஊராட்சியில், வாவிடமருதூர் 15 பி மேட்டுப்பட்டி பண்ணைக்குடி அச்சம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வாவிட மருதூர் கிராமத்தில் நடைபெற்றது .

இதில், காலை 9 மணிக்கு சோழவந்தான் வெங்கடேசன் எம். எல் .ஏ. வருவதாக தகவல் வெளியிடப்பட்ட நிலையில், 12:00 மணி வரை எம்.எல்.ஏ. வராததால், பொதுமக்கள் தங்களின் மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி வந்தனர்.

இதில் , வாவிட மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனக்கு வாரிசு சான்றிதழ் வழங்க கோரி மனு அளித்ததாக தெரிகிறது. ஆனால் , அதிகாரிகள் ஏதேதோ காரணம் கூறி சான்றிதழ் வழங்க முடியாது என, மறுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், மனுவை அளித்தவர் வெங்கடேசன் எம். எல். ஏ. வுக்கு பேசியுள்ளார் அப்போது, வெங்கடேசன் எம் எல் ஏ அதிகாரிடம் பேசி மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால், வெங்கடேசன் எம். எல். ஏ. சொல்லியும் அதிகாரி நடவடிக்கை எடுக்காததால்,
12 மணிக்கு மேல் முகாமை பார்வையிட வந்த வெங்கடேசன் எம். எல். ஏ. விடம் மனு அளித்தவர் நீங்கள் சொல்லியும் அதிகாரி கேட்க மறுக்கிறார் என புகார் கூறினார்.
அதிகாரியிடம், எம் எல் ஏ கேட்ட போது அவ்வாறு இல்லை என மழுப்பலாக கூறியுள்ளார்.
ஆனால், தொடர்ந்து எம்.எல்.ஏ.விடம் பேசிய மனு கொடுத்தவர் ஏற்கனவே மனு மீது நடவடிக்கை எடுக்க முடியாது என கூறியிருந்தார் .

ஆனால் , உங்களுக்கு போன் பண்ணி பேசிய பின்பு நீங்கள் அதிகாரியிடம் சொன்ன பின்பும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என கூறியது. அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், கடமைக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுவதாகவும் மனுக்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை எனவும் கூறிச் சென்றனர் .

இந்த நிலையில், ஒரு சிலர் முதல்வர் ஸ்டாலின் படம் போட்டுள்ள மனுக்களை கீழே வீசி சென்றனர். அங்கு மனு எழுதும் இடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமுக்கு வழங்கும் மனுக்கள் கீழே சிதறி கிடந்தது. இந்த முகாமின் முக்கியத்துவம் எப்படி இருக்கும் என்பதை சொல்லாமல் உணர்த்தியதாகவும், கூடுதலாக வெங்கடேசன் எம். எல் .ஏ. முகாமை பார்வையிட்டு கொண்டிருந்தபோது, முகாமில் மனுக்கள் வாங்க வந்த அதிகாரிகள் அரட்டை அடித்துக் கொண்டும் செல்போனில் மூழ்கிக் கொண்டும் இருந்தது பொது மக்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *