March 3, 2026
நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சண்டி ஹோமம் சிறப்பாகப நடைபெற்றது

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் மகா சண்டி ஹோமம் சிறப்பாகப நடைபெற்றது

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடைய நாயகி அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத சிறப்பு நிகழ்வாக மகா சண்டி ஹோமம் மிகுந்த பக்தி, சிறப்புடன் நடைபெற்றது.

ஆடி 22ம் தேதி (07.08.2025) வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி, மாலை காலம் ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆடி 23ம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10.25 மணிக்கு கோ பூஜையுடன் தின நிகழ்வுகள் துவங்கி, அனைத்து பூஜைகள் மற்றும் ஹோமங்களும் நடைபெற்று, மதியம் 12.30 மணியளவில் பூர்ணாஹுதியும், அதனைத் தொடர்ந்து மூலாலய அபிஷேகம் நடைபெற்றது.

அன்றைய மாலை 7.00 மணிக்கு பூச்சொரிதல் விழா மகிழ்ச்சியாக நடைபெற்றது. மதியம் திருக்கோவிலில் பக்தர்களுக்கான மாபெரும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது வழங்கப்பட்டது.

நாட்டின் நலன், மக்களின் செழிப்பு, மற்றும் பக்தர்களின் வளமைக்காக நடத்தப்பட்ட இந்நிகழ்வில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளைப் பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *