
அரசு பள்ளியில் உலக யானைகள் பாதுகாப்பு தினம்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் உலக யானைகள் பாதுகாப்பு தினத்தை ( ஆகஸ்ட் 12 ) முன்னிட்டு யானைகள் மற்றும் அதனுடைய பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை இவாஞ்சலின் தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி யானைகள் அதனுடைய வாழிடம் அதனுடைய வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய வன பாதுகாப்பு ஆகியவைகள் குறித்து மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.
முதுகலை உயிரியல் ஆசிரியர் திரு சரவணன் யானைகளால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு படங்கள் மூலம் விளக்கினார்.
இந்த நிகழ்ச்சியில் யானைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும் சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாளர் திரு வீரபாண்டி அவர்கள் செய்திருந்தார்.






