
அரசுப் பள்ளி மாணவி சாம்பியன்
வாடிப்பட்டி, ஆக.8-
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் அலங்காநல்லூர் குறு வட்ட அளவிலான தட, களப் போட்டிகள் நடந்தது. இதில் காடுபட்டிஅரசு உயர் நிலைப் பள்ளி மாணவி அஜிதா 19 வயது மாணவியர் பிரிவில் 400 மீ தடை தாண்டும் போட்டியில் தங்கப் பதக்கம்,மும்முறை தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்,நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.
மேலும் இப்பள்ளியின் சர்மிளா 400 மீ தடை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், 14 வயது மாணவியர் பிரிவில் கிருசிகா உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கமும்,,அதே பிரிவில் ஆஷிகா உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த மாணவிகள்மற்றும் பயிற்சியளித்த உடற் கல்வி ஆசிரியர்கள் வெள்ளைச்சாமி,சந்திர மோகன் ஆகியோரையும் பள்ளிதலைமை ஆசிரியர் சரவணகுமார், உதவி தலைமை ஆசிரியர் ராஜலட்சுமி, ஆசிரியர் ஆசிரியைகள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.