August 7, 2025
பள்ளி மாணவி பலத்த காயம்:

பள்ளி மாணவி பலத்த காயம்:

உசிலம்பட்டி.

மதுரை, உசிலம்பட்டி அருகே, வேகதடையில் ஏறி இறங்கும் போது தவறி விழுந்து இருசக்கர வாகனத்தில் உறவினருடன் வந்த 10 ஆம் வகுப்பு பயிலும் 3 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுத பதிவு செய்வதற்காக ஆதார் அட்டை நகல் கேட்டிருந்தாக கூறப்படுகிறது.

இன்று பள்ளிக்கு வந்த டி.பாறைப்பட்டி, உலைப்பட்டியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு பயிலும் மூன்று மாணவிகள் ஆதார் அட்டை எடுத்து வராத சூழலில், வீட்டிற்கு சென்று ஆதார் அட்டை நகலை எடுத்து வர மூவரில் ஒரு மாணவியின் உறவினரான பாலமுருகன் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பாலமுருகன் என்பவரது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு மூன்று மாணவிகளும் சென்றுள்ளனர்.

ஊருக்கு செல்லும் வழியில் திருவள்ளுவர் கல்லூரி முன்பு சாலையில் உள்ள வேக தடையில் ஏறி இறங்கும் போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பள்ளி மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்த பாலமுருகன் என்பவரும் படுகாயமடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர், மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் ஒரு மாணவியை மட்டும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த இரு மாணவிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்த பாலமுருகனுக்கும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் ,
இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறவினருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி சென்ற மூன்று பள்ளி மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *