August 6, 2025
அயோக்கியத்தனத்தின் உச்சத்தில் ஸ்டாலின் அரசு.

அயோக்கியத்தனத்தின் உச்சத்தில் ஸ்டாலின் அரசு.

தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பதவி காலம் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. தமிழகத்திற்கு புதிதாக டிஜிபி தேர்வு செய்ய வேண்டும்.

தற்பொழுது காவல்துறையில் உயர் அதிகாரிகள் மூன்று பேரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு தகுதியுள்ள நபர்களாக தேர்வு செய்து இரண்டு மாதங்களுக்கு முன்பே அனுப்பி இருக்க வேண்டும்.

ஆனால் மு.க.ஸ்டாலின் அரசு செய்யவில்லை தற்பொழுது காவல்துறையில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் நேர்மையானவர்களாக இருக்கிறார்கள். ஆதலால் திமுக அரசு தேர்வு செய்யாமல் சங்கர் ஜிவாலுக்கு பணிக்காலத்தை நீட்டிப்பு செய்யவேண்டும்.

இல்லையென்றால் இன்சார்ஜ் டிஜிபியாக வைத்துக்கொண்டு 2026 தேர்தலை சந்தித்தால் தில்லு முல்லு திருட்டுத்தனம் பண்ண முடியும் அதற்காக டிஜிபியை மத்திய அரசுக்கு தேர்வு செய்து அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு விசாரணை செய்து டிஜிபி பதவிக்கு மூன்று உயர் அதிகாரிகளை தேர்வு செய்து மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று மதுரை கிளை ஆணையிட்டுள்ளது.

அதையும் மதிக்காமல் திமுக அரசு காலம் தாழ்த்துகிறது திமுக ஒரு போதும் தில்லுமுல்லு அயோக்கியத்தனம் திருட்டுத்தனம் பண்ணாமல் திமுகவால் ஜெயிக்க முடியாது. மக்களுக்கு பணம் கொடுத்து தான் ஓட்டு வாங்க வேண்டும் காவல்துறையில் திமுக அரசின் கைக்கூலியாகவும் கடமையிலிருந்து தவறுவோராகவும் காவல்துறையில் தலைமை பொறுப்பில் அமர்த்த வேண்டும்.

இதுதான் திராவிட அரசின் கொள்கை மக்களையும் மதிக்க மாட்டார்கள் உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றத்தையும் மதிக்க மாட்டார்கள். இப்படி ஒரு இழிவான அரசு இந்த உலகில் கிடையவே கிடையாது எப்படியெல்லாம் மனிதன் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ வைப்பது தான் திராவிட கொள்கை.

அடித்தளமாக தலித் சிறுபான்மையினர் காப்பாற்றுவதாக சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் 2026 ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று சில ஊடகங்களும் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகம், வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ், ஜெயக்குமார், விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம், இவர்களையெல்லாம் விலை பேசி மீண்டும் அரியணை ஏறுவாரா ஸ்டாலின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *