August 6, 2025
தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களுக்கு உடனடியாக லைப் ஜாக்கெட் வழங்க வேண்டும் அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் வலியுறுத்தல்

நாகர்கோவில் ஆகஸ்ட் 06 :
தமிழகத்தில் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களில் படகில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு உடனடியாக அரசு மானியத்துடன் லைப் ஜாக்கெட் வழங்கிட வேண்டும் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்கு 75 சதவிகித மானிய விலையில் லைப் ஜாக்கெட் வழங்க இருப்பதாக மீன்
வளத்துறை அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டிணம் துறைமுகத்தில் உள்ள அருளப்பன் என்பவர் அரசு மானியத்தில் நான்கு லைப் ஜாக்கெட்டுகளுக்கு உரிய பணம் ரூபாய் 2472 ஐ கட்டியிருந்தார். ஐந்து மாதங்களாகியும் லைப் ஜாக்கெட் கிடைக்காததால் அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஸ் சந்திரா, பூர்ணிமா ஆகியோர், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் தமிழ் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து மீனவர்களுக்கும் லைப் ஜாக்கெட் வழங்கிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

குமரி மாவட்டத்தை சேர்ந்த அருளப்பன் செய்துள்ள செயலால் தமிழகத்தில் உள்ள 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் பயனடைய உள்ளனர்.

எனவே அரசு மானியத்தில் தமிழக மீனவர்களுக்கு உயிர் காக்கும் கவசமான லைப் ஜாக்கெட்டை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *