
அயங்கோட்டை அரசு பள்ளி மாணவ மாணவிகள் சாதனை.
வாடிப்பட்டி, ஆக.5-
மதுரை மாவட்டம், அய்யங்கோட்டை அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் சதுரங்கம் கபடி தடகள போட்டிகளில் சாதனை படைத்துள்ளனர். குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில், எர்ரம்பட்டி அரசு உயர் நிலைப் பள்ளியில், நடந்தது.
இதில் சதுரங்க போட்டியில் 19 வயது ஆண்கள் பிரிவில் மாதேஸ்வரன் முதலிடம், ஹரிஸ் இரண்டாமிடம், 17 வயது பெண்கள் பிரிவில் சுருதிகா இரண்டாமிடம் 19 வயது பெண்கள் பிரிவில் அர்ச்சனா இரண்டாமிடம் கேரம் போட்டியில் 14 வயது பெண்கள் ஒற்றையர் பிரிவில் சந்தோஷி இரண்டாமிடம் 17 வயது ஆண்கள் இரட்டையர் பிரிவில் பழனிவேல் கிருஷ்ணகுமார் இரண்டாமிடம் கபடி போட்டியில், 14 வயது பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் 17 வயது பெண்கள் பிரிவில் முதலிடம் 19 வயது பெண்கள் பிரிவில் இரண்டாமிடம் தடகள போட்டியில் 17 வயது பெண்கள் பிரிவில் தனுஷா போல் வால்ட் போட்டியில் இரண்டாமிடம் அதே போல்வால்ட் போட்டியில் 19 வயது பெண்கள் பிரிவில் லட்சுமி இரண்டாமிடம் சுவேதா மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்து மதுரையில் நடைபெறும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இந்த சாதனை மாணவ மாணவிகளையும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அருண் ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் மாரிசெல்வம் உதவித் தலைமை ஆசிரியர் சித்தார்த்தன் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தனர்.