August 6, 2025
சோழவந்தான் அருகே, தேனூர் அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் கோவில் மண்டல அபிஷேக விழா

சோழவந்தான் அருகே, தேனூர் அருள்மிகு சுந்தராஜ பெருமாள் கள்ளழகர் கோவில் மண்டல அபிஷேக விழா

சோழவந்தான் ,ஆகஸ்ட்: 5.

மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் திருக்கோவில் மண்டல அபிஷேக விழா நடைபெற்றது . மண்டல பூஜை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருக்கோவிலில் இருந்து வைகை நிதி உற்சவ மண்டபத்திற்கு சாமி புறப்பாடு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, மண்டலபிஷேகத்திற்கான சிறப்பு யாகம் நடைபெற்று, சங்காபிஷேகம் நடைபெற்றது . மாலை நாலு மணிக்கு திருமஞ்சனம் மற்றும் கருட வாகனம் அலங்காரமும் வைகை நதியில்நீராடுதல் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து , உற்சவ மண்டபத்தில் தசாவதாரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது .
இரவு திருக்கோவிலுக்கு உற்சவமூர்த்தி புறப்பாடு நடைபெற்றது.

இதில், தேனூர் மற்றும் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள்
கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழிய பாண்டியன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *