April 14, 2026
சாணம்பட்டி பதினெண்சித்தர்பீடத்தில் பதினெட்டாம் பெருக்கு அன்னதான விழா.

சாணம்பட்டி பதினெண்சித்தர்பீடத்தில் பதினெட்டாம் பெருக்கு அன்னதான விழா.

வாடிப்பட்டி, ஆக.4-

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன்கோட்டை சாணாம்பட்டியில் சிறுமலை அடிவாரத்தில் இயற்கை எழில்சூழ்ந்த சிறுமலை ஓடைகரையில் பதினெண்சித்தர்
பீடஆலயத்தில், பதினெண் சித்தர்பீட அறக்கட்டளை சார்பாக பதினெட்டாம்
பெருக்கையொட்டி யாகசாலை சிறப்பு பூஜையும், சித்தர்பீடத்திற்கு சிறப்புஅபிஷேக ஆராதனை அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

மதியம் அன்னதானமும், இலவச அக்குபஞ்சர்,சித்தா, ஆயுர்வேதிக் மற்றும் இயற்கை மருத்துவ
சிகிச்சை முகாமும் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, தென் சென்னை திமுக மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் தலைமை தாங்கி அன்னதானத்தை தொடக்கி வைத்தார்.

வழக்கறிஞர் அன்பழகன், முன்னாள் கூட்டுறவு சங்க் தலைவர் இரும்பாடி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக அறங்காவலர் பெ.விஜயபாஸ்கர் வரவேற்றார். இந்த மருத்துவ முகாமை, தொழிலதிபதிபர் ரமேஷ் குமார் தொடக்கிவைத்தார். இதில்,
மருத்துவர்கள் லிங்குசெல்வி தலைமையில் டாக்டர்கள் தம்பிதுரை, ஜெராலால், ஜோதிமுனீஸ்வரி, செல்வதாய், பாலா உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் , மூட்டுவலி, முதுகுவலி, தலைவலி, கால்ஆணி, சொரியாசிஸ், சளி, ஆஸ்துமா, சர்க்கரை உள்பட அனைத்துவகை நோய்களுக்கும் மருத்துவ சிகிச்சையளித்து, மருந்து மாத்திரைகள் வழங்கினர். முடிவில், முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் பொன்ராம் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *