
கொல்லங்குடி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையானபஸ் நிறுத்தம் …நிறைவேற்றிய சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் : மகிழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் !
மாவட்ட ஆட்சியருக்குபொதுமக்கள் பாராட்டு …!சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வட்டம் வளர்ச்சி அடைந்து வரும் ஊர்கொல்லங்குடி இங்குஉள்ள அருள்மிகு வெட்டுடைய காளியம்மன் திருக்கோவில் தமிழக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

ந்தக் கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில்இந்த ஊரில் பஸ் நிறுத்தம் இருந்தும் அந்த இடத்தில்பஸ் நிறுத்த வில்லை.
ஆனால் கொல்லங்குடி காளியம்மன் கோவிலுக்கு செல்லும் ஆர்ச் முன்புறம் பஸ் நிறுத்தப்பட்டது.இதனால் பல விபத்துக்கள்ஏற்பட்டது. பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை மற்றும் ஆர்ச் உள்ளே ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலைமை, முதியவர்கள் ஆர்ச் உள்ளே இருந்து வெளியே வர முடியாத ஆபத்தான சூழல் நிலவி வந்த நிலையில்,பொதுமக்கள் நலன் கருதி சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஐயா செந்தில்நாதன் அவர்களின் பரிந்துரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் துரிதமாக நடவடிக்கையில் கொல்லங்குடி பஞ்சாயத்து நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள பழைய பயணிகள் நிழல் கூடம் முன்பாக தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இதனால்.கொல்லங்குடி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்எந்தவித போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல்எளிதாக செல்ல முடிகிறது.
இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

பஸ்ஸை உரிய இடத்தில் நிறுத்த பரிந்துரை செய்த மரியாதைக்குரிய எம்எல்ஏ அவர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகள் அனைவருக்கும் கொல்லங்குடி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்தனர்.