February 23, 2026
எஃப்-35 போர் விமானம் வேண்டாம்: டிரம்ப்பின் சலுகையை நிராகரித்த இந்தியா

எஃப்-35 போர் விமானம் வேண்டாம்: டிரம்ப்பின் சலுகையை நிராகரித்த இந்தியா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பதட்டங்களுக்கு மத்தியில், அதிநவீன எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கான அமெரிக்காவின் சலுகையை இந்தியா நிராகரித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் வரி விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது, எஃப்-35 விமானங்களை இந்தியாவிற்கு விற்க டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.

‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு நிலையை அடைவதே இந்தியாவின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதிக விலை கொடுத்து ஆயுதங்களை வாங்கி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதை இந்தியா விரும்பவில்லை. மாறாக, உள்நாட்டிலேயே ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும், வெளிநாடுகளுடன் இணைந்து இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எஃப்-35 விமானங்களை வாங்க விருப்பமில்லை என்ற தனது முடிவை இந்தியா அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

அதே சமயம், ரஷ்யா தனது ஐந்தாம் தலைமுறை எஸ்யு-57இ போர் விமானம் தொடர்பாக இந்தியாவிற்கு சிறந்த சலுகைகளை வழங்கியுள்ளது.

இந்தியாவில் விமான பாகங்களை ஒன்றிணைக்கும் (Assembly Line) அமைக்க உதவுதல்.
இந்த விமானத்தை இந்தியாவிலேயே தயாரித்தால், அதன் உற்பத்திச் செலவு பாதியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகப் போர் தொடர்பான பிரச்சனையை பழிவாங்கும் நடவடிகள் மூலம் அல்லாமல், விவாதங்கள் மூலம் தீர்க்கவே இந்தியா முயற்சிக்கிறது. அதே நேரத்தில், நாட்டின் நலனில் எந்த சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் இந்தியா உறுதியாகத் தெரிவித்துள்ளது.

விமானத்தை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை முழுமையாக வழங்குதல்.

இந்தியாவின் ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வகையில், விமானத்தின் முழு மென்பொருள் மூலக் குறியீட்டையும் (Source Code) வழங்குதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *