March 2, 2026
நிலக்கோட்டை அருகே பதிவு தபாலை வாங்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளித்த வக்கீல்.

நிலக்கோட்டை அருகே பதிவு தபாலை வாங்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் மீது தாசில்தாரிடம் புகார் அளித்த வக்கீல்.

நிலக்கோட்டை, ஜூலை. 31-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள வணிக வளாகத்தில் வக்கீலாக இருப்பவர் இளையராஜா. இவர் நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமியிடம் நேற்று ஒரு மனுவை கொடுத்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 23.7.2025 அன்று எனது கட்சிக்காரர் சார்பாக வக்கீல் சட்ட அறிவிப்பினை குல்லலக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு ஒரு பதிவு தபால் அனுப்பி இருந்தேன். அதனை அரசு ஊழியராக பணிபுரியக்கூடிய கிராம நிர்வாக அலுவலர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நான் பதிவு செய்த தபாலை வாங்க மறுத்தது சட்டவிரோத செயலாகும். அதேபோன்று கிராம நிர்வாக அலுவலர் பணி புரியக்கூடிய அலுவலர்கள் அந்தந்த கிராமத்திலே தங்கிப் பணி புரிய வேண்டும் என்பது சட்ட விதி ஆகும்.

ஆனால் குல்லலக்குண்டு கிராம நிர்வாக அலுவலர் கிராம எல்லைக்குட்பட்ட கிராமத்தில் தங்காமல் பொய்யான வீட்டு முகவரியை அரசுக்கு கொடுத்துள்ளார். குல்லலக்குண்டு கிராம அலுவலகத்தில் 2 நபர்களை சட்டவிரோதமாக அலுவலகத்தில் பணிக்கு அமர்த்தி பொதுமக்களிடம் பட்டா மாறுதல் மற்றும் இதர பணிகளுக்கு சட்ட விரோதமாக நியமிக்கப்பட்ட 2 நபர்களை வைத்து கையூட்டு பெறுவதற்காகவே வைத்துக் கொண்டு பணம் பெற்று வருகிறார். மேலும் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்கும் திருட்டு கும்பலன் கூட்டு சேர்ந்து இயற்கை வளங்களை பாதுகாக்க தவறி வருகிறார்.

இதுகுறித்து அரசு பணிகளை செய்ய கடமை ஆற்ற தவறியும், பல்வேறு சட்ட விரோத குற்ற செயலில் ஈடுபட்டு வரும் கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இந்த புகார் பெற்றுக் கொண்ட நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார். ஒரு கிராம நிர்வாக அலுவலர் வக்கீல் கொடுத்த புகாரின் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *