
நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது கோவில் மண்டல பூஜை விழா பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர், ஜுலை.24-
விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு மதுரா நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு விழா சிறப்பாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு மதுரா நத்தமேடுபுதூர் கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜீன் 5 ந்தேதி கும்பாபிஷேகம்நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனுடைய 48 வது நாள் மண்டல பூஜை விழா தர்மகர்த்தா குமாரசாமி தலைமையில் கருடானந்தா சுவாமி முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் விநாயகர் பூஜை கலச பூஜை சுப்ரமணிய ஹோமம் லட்சுமி ஹோமம் அமைச்சாரம்மன், எல்லையம்மன் பூஜைகள், துர்கா ஹோமம் , ருத்ர ஹோமம் சங்கு அபிஷேகம் பூர்ணாகுதி, கலசம் புறப்பாடு தீர்த்த அபிஷேகம், உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சாமி விதியுலா நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிகும்பிட்டனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.